ஜாம்பவந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jambavan

ஜாம்பவந்தன் (சமக்கிருதம்: जाम्‍बवान) என்பவர் சிவபெருமானுக்கு, பார்வதிக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் கரடி முகமும், மனித உடலும் கொண்டவர். இவர் ஜாம்பவான் என்றும் அறியப்படுகிறார்.

ஜாம்பவந்தனின் தோற்றம்[தொகு]

சிவபெருமானும் பார்வதியும் கையிலை மலையில் இருந்த பொழுது, மிக ரம்மியமான காட்டினை அனுகி, இருவரும் கரடி ரூபம் கொண்டனர். அத்துடன் அவர்களின் உறவில் கரடி முகமும், மனித உடலும் கொண்ட குழந்தை பிறந்தது. அக்குழந்தை சிவ ரூபத்தினை கொண்டவராக இருந்தமையால், ஜாம்பவந்தன் என்று அழைக்கப்பட்டார். [1]

அரக்கர்களும், தேவர்களும் அமிழ்தம் வேண்டி பாற்கடலை கடையும் பொழுது அங்கு மந்திரங்களை ஜபம் செய்தவர் ஜாம்பவந்தன் ஆவார்.

இராமயணத்தில் ஜாம்பவந்தன்[தொகு]

ஜாம்பவந்தன் இராமரின் பக்தனாவார்.

கிருஷ்ணவதாரத்தில் ஐாம்பவந்தன்[தொகு]

ஜாம்பவான் வசித்த காட்டில் சியமந்தக மணி கொண்டு சென்ற பிரசேனன் என்பவரை சிங்கமொன்று கொன்றது. அந்த சிங்கத்தினை கொன்று ஜாம்பவான் சியமந்தக மணியை எடுத்துச் சென்றார். அதனையறிந்த கிருஷ்ணன் ஜாம்பவானுடன் போர்செய்தார். இறுதியில் கிருஷ்ணன் தான் வணங்கும் இராமனின் மறுபிறவி என்பதை அறிந்து ஜாம்பவான் சியமந்தக மணியை அவரிடம் கொடுத்தார். அத்துடன் சத்தியபாமா என்ற தன் மகளையும் கிருஷ்ணனுக்கு திருமணம் செய்வித்தார்.


சைவ சமயம்

விக்கித்திட்டம் சைவ சின்னம்.png

இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.

இவற்றையும் காண்க[தொகு]


மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் - பாற்கடலில் தோன்றியவை பங்கீடு பகுதி

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்பவந்தன்&oldid=1517137" இருந்து மீள்விக்கப்பட்டது