ஜாமி பள்ளிவாசல், டொரான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாமி பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்56 பாஸ்டட் ஈவ்
மாகாணம்ஒன்ராறியோ,  கனடா
மாநகராட்சிடொரான்டோ
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1968[1]
தலைமைஅம்ஜத் சையத் [1]
இணையத்
தளம்
JamiMosque.com

ஜாமி பள்ளிவாசல், டொரான்டோ (Jami Mosque,Toronto) என்பது கனடாவின் ஒன்ராறியோ மாநில டொரான்டோ நகரில் ஹை பார்க் பகுதிக்கு கிழக்கில் உள்ளது. இது கனடாவின் பழமையான இசுலாமிய கலாச்சார மையம் ஆகும்.[2]

வரலாறு[தொகு]

1910 இல் இங்கு ஆங்கிலோ-சாக்சன் பிராட்டஸ்டன்ட் சமூகம் வழிபாடு செய்வதற்கு சர்ச் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது.முதல் உலக போர் பல ஆண்டுகளாக தொடர்ந்த காரணமாக கட்டுமானப் பணி தாமதமானதால் 1928 வரை சர்ச் கட்டிடம் நிறைவு பெறவில்லை. அதே வேளையில் அல்பேனியாவில் இருந்து பல முஸ்லிம்கள் கனடாவில் குடியேறினர். 1969 இல் பால்கன் இசுலாமிய சமுதாய மக்கள் கட்டிடத்தை விலைக்கு வாங்கி வணக்கத்திற்குரிய பள்ளிவாசல் கட்டிடமாக மாற்றினர். 2009 இல் தற்போதைய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது அந்நகரில் இசுலாமிய மக்களின் முதல் வணக்கத்தலம் ஆகும்.[2]

தலைமையிடம்[தொகு]

இந்த பள்ளிவாசல் தப்லீக் ஜமாஅத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் கூடும் இடமாக இருந்தது. 1981 இல் அந்நகர குஜராத் முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் செயல்பாட்டிற்கு டொரான்டோ நகரின் கிழக்கு பகுதியில் தனியாக கட்டிடம் வாங்கி பயன்படுத்தினர்.பின் அதை புனரமைப்பு செய்து மதினா பள்ளிவாசல் (டொரான்டோ) எனும் பெயரில் பள்ளிவாசல் கட்டினர். இதனால் ஜாமி பள்ளிவாசல் முஸ்லிம் மாணவ கூட்டமைப்பின் தலைமையகமாகக் மாற்றப்பட்டது.[3]


வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kernaghan, Tom G. OAK, Jami Mosque served changing community
  2. 2.0 2.1 Jami Mosque: About us பரணிடப்பட்டது 2017-02-01 at the வந்தவழி இயந்திரம்
  3. Masud, Muhammad Khalid. "Travellers in faith: studies of the Tablīghī Jamāʻat", p. 227