ஜாமியா பள்ளிவாசல், நதோவல்
Appearance
ஜாமியா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லூதியானா, பஞ்சாப்,இந்தியா |
சமயம் | இசுலாம் |
ஜாமியா பள்ளிவாசல் (Jamia Masjid), இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் நதோவல் கிராமத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இப்பள்ளிவாசல் அமைந்துள்ள நதோவல் ராய்கோட்டிலிருந்து 12 கிமீ தொலைவிலும், லூதியானாவிலிருந்து 54 கிமீ தொலைவிலும் உள்ளது.
வரலாறு
[தொகு]1947 இல் இந்தியப் பிரிவினை போது சுமார் 10 முசுலிம் குடும்பங்கள் பாக்கித்தான் சென்றது. ஆனால் 50 முசுலிம் குடும்பங்கள் உள்ளூரிலேயே தங்கினர். அவர்கள் தொழுவதற்கு ஜாமியா பள்ளிவாசலைக் கட்டினர்.[1]
புனரமைப்பு
[தொகு]ஜாமியா பள்ளிவாசல் 2015 இல் புனரமைக்கப்பட்டது. மொத்த செலவான 2.5 மில்லியன் இந்திய ரூபாயில் 1.5 மில்லியன் இந்திய ரூபாய் உள்ளூர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கொடுக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் நதோவல் பகுதியில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Non-Muslims help repair Punjab mosque. The times of India.
- ↑ Sikhs and Hindus help Muslims repair mosque in Indian Punjab. Daily Pakistan.