உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாமியா தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாமியா தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி (Jamia Darussalam Arabic college) தமிழ்நாட்டின்,திருப்பத்தூர் மாவட்டத்தில் - உமராபாத்தில் செயல்படும் ஒரு அரபுக்கல்லூரியாகும். 1924 ஆம் ஆண்டு காகா முஹம்மது உமர் என்பவரால் துவங்கப்பட்ட இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கீழ் இயங்குகின்றது.

வரலாறு

[தொகு]

ஜாமியா தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி காகா முகமது உமர் என்பவரால் நிறுவப்பட்டது. டிசம்பர் 7 ஆம் தேதி 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. காகா முகமது உமர் அவர்களின் நினைவாக இந்த ஊருக்கும் உமராபாத் என்று பெயரிடப்பட்டது. இந்நாட்டின் சமயம், கல்வி, சுகாதரங்களில் சீர்திருத்தவும் நலம்புரியும் சேவைகளை வழங்கும் திட்டத்துடன் இக்குழுமம் துவங்கப்பட்டது. [1]

கல்வி

[தொகு]

ஜாமியா தாருஸ்ஸலாம் பல்வேறு துறைகளில் இஸ்லாமிய கல்வியை வழங்குகிறது. இது இளங்கலை, முதுகலை, டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. பாரசீகம், அரபு, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய நான்கு மொழிகளில் பயிற்சி அளிக்கிறது மேலும் குர்ஆனை முழுவதும் மனப்பாடம் செய்வதற்கான பயிற்சியையும் வழங்குகிறது.

மருத்துவம்

[தொகு]

ஜாமியா தாருஸ்ஸலாம் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக உமராபாத்தில் ஜாமியா தாருஸ்ஸலாம் மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் சுற்று வட்டார பகுதி மக்களுக்காக செயல்பட்டுவருகின்றது.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. [1] வேலூர் மாவட்ட அரசு இணையதளம்}
  2. [2] ஜஸ்ட் டையல் இணையதளத்தில்}