உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாபுவா

ஆள்கூறுகள்: 22°46′N 74°36′E / 22.77°N 74.6°E / 22.77; 74.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாபுவா
நகரம்
ஜாபுவா is located in மத்தியப் பிரதேசம்
ஜாபுவா
ஜாபுவா
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஜாபுவா நகரத்தின் அமைவிடம்
ஜாபுவா is located in இந்தியா
ஜாபுவா
ஜாபுவா
ஜாபுவா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°46′N 74°36′E / 22.77°N 74.6°E / 22.77; 74.6
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஜாபுவா மாவட்டம்
ஏற்றம்
318 m (1,043 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,753
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
457661
வாகனப் பதிவுMP-45
இணையதளம்https://jhabua.nic.in/en/
ஜாபூவா சமஸ்தானம்

ஜாபுவா (Jhabua), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த ஜாபுவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இந்நகரம் ஜாபூவா சமஸ்தானத்தின் தலைமையிடமாக விளங்கியது. இது மாநிலத் தலைநகரான போபாலுக்கு தென்மேற்கே 345 கிகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜாபுவா மக்கள் வட்டார மொழியான பில்லி மொழியைப் பேசுகின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 7,270 குடியிருப்புகளும் கொண்ட ஜாபுவா நகரத்தின் மக்கள் தொகை 35,753 ஆகும். அதில் 18,375 ஆண்கள் மற்றும் 17,378 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.46 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.72 % மற்றும் 36.78 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 73.00%, இசுலாமியர் 14.38%, சமணர்கள் 4.89% கிறித்தவர்கள் 7.54% மற்றும் பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர். [1]இந்நகரத்தில் வட்டார மொழியாக பில்லி மொழி பேசப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபுவா&oldid=4288397" இலிருந்து மீள்விக்கப்பட்டது