ஜாபிர் கடற்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேக் ஜாபிர் அல்-அகமத் அல்-சபா கடற்பாலம் (Sheikh Jaber Al-Ahmad Al-Sabah Causeway) என்பது குவைத் நாட்டில் கட்டப்பட்டுவரும் ஒரு கடல் பாலமாகும். இந்தப்பாலம் சுமார் முன்னூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.[1] ஐயுண்டாய் கட்டுமான நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் உரிமையாளராக குவைத் பொதுப்பணித்துறை அமைச்சகம் உள்ளது. குவைத்தின் சுபையா நகரத்தில் முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. குவைத் நகரையும் சுபையா நகரையும் இணைக்கும் விதமாக முன்பே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலம் வழியாகக் குவைத்தில் இருந்து சுபையா நகரத்துக்குச் சென்றடைய 70 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த புதிய கடல் பாலத்தின் வழியாக 20 நிமிடத்தில் சென்று விடலாம். இந்தப் பாலம் 36 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் 27 கிலோமீட்டர் வரை கடலில் கட்டப்பட்டுள்ளது.[2]

2006ஆம் ஆண்டு உயிர் இழந்த குவைத் மன்னர் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சாபஹ் பெயர் இந்தப் பாலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கடல் பாலத்தின் பணிகளானது 2018 செப்டம்பர் காலகட்டத்தில் 97% முடிந்துவிட்டது. பாலத்தை 2018 திசம்பரில் திறக்க திட்டமிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sshic.com/projects/sheikh-jaber-al-ahmed-al-sabah-causeway
  2. மு.கிருத்திகா (2019 சனவரி 26). "உலகின் நீளமான பாலம்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 27 சனவரி 2019.
  3. http://www.gdnonline.com/Details/345554/-Shaikh-Jaber-causeway-to-open-in-December
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபிர்_கடற்பாலம்&oldid=2764646" இருந்து மீள்விக்கப்பட்டது