உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் லே காரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் லே காரே
2008 இல் ஜான் லே காரே
2008 இல் ஜான் லே காரே
பிறப்புடேவிட் ஜான் மூர் கார்ன்வெல்
19 அக்டோபர் 1931 (1931-10-19) (அகவை 92)
பூல், டார்செட், இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர், முன்னாள் ஒற்றர்
மொழிஆங்கிலம்
தேசியம்பிரித்தானியர்
வகைஉளவுப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி ஸ்பை ஹூ கேம் இன் ஃப்ரம் தி கோல்ட்
டிங்கர், டெய்லர், சோல்ஜர், ஸ்பை
ஸ்மைலீஸ் பீப்பிள், தி கான்ஸ்டன் கார்டனர்
துணைவர்அலிசன் ஷார்ப் (1954–1971)
வாலரி யூஸ்டேஸ் (1972–நடப்பு)
பிள்ளைகள்4 மகன்கள்
இணையதளம்
http://johnlecarre.com/

ஜான் லே காரே (John le Carré) என்ற புனைப்பெயரில் எழுதும் டேவிட் ஜான் மூர் கார்ன்வெல் (David John Moore Cornwell, பி. அக்டோபர் 19, 1931) ஒரு பிரித்தானிய எழுத்தாளர். சமகால உளவுப்புனைவு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1950 கள் மற்றும் 60 களில் ஐக்கிய இராச்சியத்தின் உளவு நிறுவனங்களான எம். ஐ. 5 மற்றும் எம். ஐ. 6 ஆகியவற்றில் பணியாற்றியவர். 1963 இல் ஜான் லே காரே என்ற புனைப்பெயரில் வெளியான தி ஸ்பை ஹூ கேம் இன் ஃப்ரம் தி கோல்ட் (The Spy Who Came in from the Cold) என்ற அவரது புதின்ம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகின் பல நாடுகளிலும் அதிக விற்பனை ஆனது. இதைத் தொடர்ந்து தன் பணியிலிருந்து விலகிய கார்ன்வெல் முழு நேர எழுத்தாளரானார். காரேயின் படைப்புகள் பனிப்போரில் அமெரிக்க-பிரித்தானிய மற்றும் சோவியத் உளவு நிறுவனங்களிடையேயான போட்டிகளையும் மோதல்களையும் மையக்கருவாகக் கொண்டுள்ளன. 20ம் நூற்றாண்டின் பிற உளவுப் புனைவுப் படைப்புகளைப் போல் ஒற்றர்களின் உலகை கறுப்பு-வெள்ளையாக காட்டாமல் அற அடிப்படையில் மிகவும் சிக்கலான ஒன்றாக சித்தரிக்கின்றன. 1991 இல் பனிப்போர் முடிவடைந்த பின்னர் காரே தனது படைப்புகளை புதிய பலசார் அரசியல் சூழலில் நடப்பனவாக மாற்றிக் கொண்டார். அவரது படைப்புகள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_லே_காரே&oldid=3459617" இலிருந்து மீள்விக்கப்பட்டது