ஜான் புரூஸ் நார்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான் புரூஸ் நார்டன்
சென்னை மாகாண தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1863–1868
முன்னவர் தாமஸ் சிட்னி ஸ்மித்
பின்வந்தவர் ஜான் டி. மேனே
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 8, 1815(1815-07-08)
இங்கிலாந்து, இலண்டன்
இறப்பு 13 சூலை 1883(1883-07-13) (அகவை 68)
இங்கிலாந்து, இலண்டன்
பிள்ளைகள் எர்ட்லி நார்டன்
படித்த கல்வி நிறுவனங்கள் Harrow,
Merton College, Oxford
பணி வழக்கறிஞர்
தொழில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்

ஜான் புரூஸ் நார்டன் (John Bruce Norton) (8 சூலை 1815 - 13 சூலை 1883) என்பவர் பிரித்தானிய வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். இவர் மதராஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் வழக்கறிஞரும் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளருமான எர்ட்லி நார்டனின் தந்தை ஆவார் .

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜான் புரூஸ் நார்டன் 1815 இல் லண்டனில் பிரித்தானிய படை வீரரும், வழக்கறிஞருமான ஜான் டேவிட் நார்டனுக்கு (1787-1843) மகனாக பிறந்தார். ஜான் டேவிட் நார்டன் 1841–42ல் சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். ஜான் புரூஸ் நார்டன் தனது கல்வியை ஹாரோ மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் பயின்றார் . பின்னர் சட்டம் பயின்ற இவர் 1841 இல் லிங்கனின் இன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார்.

நார்டன் ஒரு ஆர்வமிக்க துடுப்பாட்ட வீரராக இருந்தார். 1832-33 காலக்கட்டத்தில் ஹாரோ கிரிக்கெட் லெவனில் விளையாடினார். [1]

தொழில்[தொகு]

நார்டன் தனது தந்தையுடன் 1842 இல் இந்தியாவுக்குச் சென்று சென்னை வழக்கறிஞர் வேலையைத் தொடங்கினார். 1845 ஆம் ஆண்டில் அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர் 1845 முதல் 1862 வரை பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டில் இவர் சென்னை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இப்பதவியல் 1863 முதல் 1871 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.

நார்டன் 1843இல் சென்னையின் ஷெரீஃப்பாக நியமிக்கப்பட்டார். இப்பதவியல் 1843 முதல் 1845 வரை இவர் இருந்தார். மேலும் இவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராக 1862 முதல் 1868 வரை இருந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Mr. Eardley Norton." Times [London, England] 16 July 1931: 14. The Times Digital Archive. Web. 2 Apr. 2014
  •   "Norton, John Bruce". Dictionary of National Biography 41. (1895). London: Smith, Elder & Co. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_புரூஸ்_நார்டன்&oldid=2795117" இருந்து மீள்விக்கப்பட்டது