ஜான் பீட்டர் (வளைதடிப் பந்தாட்ட வீரர்)
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | சென்னை (தற்போது சென்னை), சென்னை மாகாணம் (தற்போது தமிழ்நாடு), பிரித்தானியா | 19 சூன் 1937|||||||||||||||||||||||||||
இறப்பு | 30 சூன் 1998 சென்னை, தமிழ்நாடு | (அகவை 61)|||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | வளைதடிப் பந்தாட்டம் | |||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||||||||
மெட்ராஸ் என்ஜினியர் குரூப் | ||||||||||||||||||||||||||||
சர்வீசஸ் | ||||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||
இந்தியா | ||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
|
விக்டர் ஜான் "வி. ஜே" பீட்டர் (Victor John "V. J." Peter 19 சூன் 1937 - 30 சூன் 1998) ஓர் இந்திய தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட வீரராவார். மூன்று முறை ஒலிம்பிக்குப் போட்டிகளில் விளையாடிய இவர், 1960, 1964 மற்றும் 1968 ஒலிம்பிக் போட்டிகளில் முறையே வெள்ளி, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார். [1] பீட்டரின் சகோதரர் விக்டர் பிலிப்ஸ் 1975 உலகக் கோப்பை வென்ற அணியில் உறுப்பினராக இருந்தார். [2]
மெட்ராஸில் (இப்போது சென்னை) பிறந்த பீட்டர், மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் மற்றும் சர்வீசஸ் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] தனது "பந்தை உருட்டுக் கொண்டு கடத்தும் திறன், பந்துக் கட்டுப்பாடு மற்றும் விளையாடுதல்" ஆகியவற்றிற்காகப் பரவலாக அறியப்படுகிறார். மேனாள் வீரர்களான ஹர்பிந்தர் சிங், இனாம்-உர் ரஹ்மான் ஆகியோரால் "சிறந்த இந்திய வீரர்களில் ஒருவர்" என்று அழைக்கப்பட்டார். மற்றொரு முன்னாள் அணி வீரர் குர்பக்ஸ் சிங் இவரை "1964 டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின் சிற்பி" என்று பாராட்டினார். 1966 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் வென்ற அணியில் முக்கியப் பங்கு வகித்தார். [4] சூன் 1998 இல் இவரது மரணத்தைத் தொடர்ந்து, மற்றொரு முன்னாள் அணி வீரர் சார்லஸ் கொர்னேலியஸ் இவரை பின்வருமாறு நினைவு கூர்ந்தார், "பீட்டர், விளையாட்டில் ஒரு மந்திரவாதி, மொஹிந்தர் லால், ஜோகிந்தர் மற்றும் பீட்டர் ஆகியோரின் இணையினை என்னால் மறக்கவே முடியாது" என்றார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swamy, V. Narayan (4 August 2011). "Peter's family struggles to make ends meet". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/Peters-family-struggles-to-make-ends-meet/articleshow/9476256.cms. பார்த்த நாள்: 5 December 2018.
- ↑ "1964 Tokyo Olympics". Bharatiya Hockey. Retrieved 5 December 2018.
- ↑ "Peter's family struggles to make ends meet". https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/Peters-family-struggles-to-make-ends-meet/articleshow/9476256.cms.
- ↑ "Peter remembered". http://expressindia.com/ie/daily/19980702/18350764.html.
- ↑ "Hockey Olympian VJ Peter no more". http://www.expressindia.com/ie/daily/19980702/18350734.html.