உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் கில்லிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் கில்லிஸ் (John Gillies, MD, 1792 - 24 நவம்பர் 1834) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு தாவரவியல் அறிஞர். முதலில் ஸ்காட்டியக் கடற்படையில் பணியாற்றினார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் படித்த அவர், நெப்போலியப் போர்களின் போது போது பிரித்தானிய ரோயல் கடற்படையில் பணியாற்றினார். நாடுகாண் பயணியான இவர் தென்னமெரிக்காவுக்குப் பலமுறை சென்றுள்ளார்.

காச நோயால் பீடிக்கப்பட்ட கில்லிசு தனது உடல் நிலை தேறுவதற்கு தென்னமெரிக்காவின் காலநிலை உதவும் என எண்ணி தனது 28 வயதில் அர்கெந்தீனா சென்றார். பல போர்கள், உள்நாட்டுக் குழப்பங்கள் மத்தியில் 8 ஆண்டுகள் வரை அங்கு தங்கியிருந்தார். 1828 ஆம் ஆன்டில் நாடு திரும்புவதற்கு முன்னர் இவர் கியூ தாவரவியற் பூங்காவிற்கு பல தாவரங்களை அனுப்பியுள்ளார். 42 வது அகவையில் 1834 நவம்பர் 24 இல் எடின்பரோவில் காலமானார்.[1]

Caesalpinia gilliesii

பல தாவரங்களுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன:

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, ஜான் கில்லிஸ் என்பவரை, Gillies. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Gibbs, F. W. (1951). John Gillies, M.D., Traveller and Botanist, 1792-1834. Notes and Records of the Royal Society of London 1951. The Royal Society, London
 2. Prodr. (DC.) 11: 395. 1847 [25 de nov 1847] (IK)
 3. Bot. Jahrb. Syst. 18(1-2): 57. 1893 [22 de dic 1893] (GCI)
 4. Mém. Foug., 5. Gen. Filic. 159. 1850-52. 1850 (IF)
 5. Abh. Königl. Ges. Wiss. Göttingen 19: 114. 1874 (IK)
 6. in Engl. & Prantl -- Nat. Pflanzenfam. [Engler & Prantl] 4, Abt. 2: 229. 1895 (GCI)
 7. Companion Bot. Mag. 1: 31. 1835 (IK)
 8. Epimel. Bot. 121. 1851 [Oct 1851] (IF)
 9. Handb. Bromel. 136. 1889 [Aug-Oct 1889] (IK)
 10. Flora Brasiliensis 15(2) 1870 (APNI)
 11. IPNI,  ஜான் கில்லிஸ் {{citation}}: Invalid |mode=CS1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கில்லிஸ்&oldid=3886406" இலிருந்து மீள்விக்கப்பட்டது