உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் எம். மார்ட்டினிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் எம். மார்ட்டினிசு
பிறப்புஜான் மேத்யூ மார்ட்டினிசு
1958 (அகவை 66–67)
கல்விகலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (இளம் அறிவியல், முனைவர்)
ஆய்வேடுமின்னோட்ட-சார்புள்ள ஜோசப்சன் இணைப்பின் பூஜ்ஜிய மின்னழுத்த நிலையில் பேரளவு குவாண்டம் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல்-நிலை குவாண்டமாக்கல் (1985)
ஆய்வு நெறியாளர்ஜான் கிளார்க்
விருதுகள்

ஜான் மேத்தியூ மார்ட்டினிசு (John Matthew Martinis, பிறப்பு: 1958) என்பவர் ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வருபவரும் ஆவார்.[1][2]

ஒரு மின்சார சுற்றில் பேரளவு குவைய புரை ஊடுருவு மின்னோட்ட சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீடு ஆகியவற்றின் கூட்டுப்பணிகளுக்காக மார்ட்டினிசு, ஜான் கிளார்க் மற்றும் மிசேல் தெவோரே ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3]

கல்வி

[தொகு]
ஜான் மார்ட்டினிசு (2017)

பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தின் போது, ஜோசஃப்சன் சுரங்கப்பாதை சந்திப்பின் குறுக்கே உள்ள கட்ட வேறுபாடு, பேரளவு மாறியின் குவாண்டம் நடத்தையை ஆய்வு செய்தார்.[4] இவரது முனைவர் பட்ட ஆலோசகர் ஜான் கிளார்க் ஆவார். இந்த நேரத்தில் இவருடன் முதுநிலை ஆராய்ச்சியாளரான மிசேல் தெவோரே ஒத்துழைத்தார்.

1985ஆம் ஆண்டில், கிளார்க், தெவோரே மற்றும் மார்ட்டினிசு ஆகியோர் நுண்ணலைத் துடிப்புகள் பற்றிய தங்கள் பகுப்பாய்வை முன்வைத்தனர். இது ஜோசஃப்சன் சந்திப்பின் குவாண்டம் நடத்தையை நிரூபித்தது. இந்த ஆய்வுப் பணி பின்னர் மீக்கடத்துதல் குவாண்டம் கணித்தலின் அடிப்படையாக மாறியது.[5]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இவர் பிரான்சு மாற்று ஆற்றல் ஆணையம் மற்றும் அணு ஆற்றல் ஆணையத்தின் ஒன்பது மையங்களில் ஒன்றான சிஇஏ பாரிசு-சக்லே மையத்தில் முனைவர் பட்ட மேலாய்வில் இணைந்தார். இதன் பிறகு போல்டரில் உள்ள தேசிய திட்டவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்காந்தத் தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்து மீக்கடத்து குவாண்டம் இடையீட்டுப் பெருக்கிச் சாதனங்கள் சார்ந்து பணியாற்றினார்.[6] தேசிய திட்டவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது, மின்வெப்ப பின்னூட்டத்துடனான மீக்கடத்து நிலைமாற்ற-விளிம்பு உணரி நுண்கலோரிமீட்டரைப் பயன்படுத்தி எக்சு-கதிர் கண்டறியும் நுட்பத்தை உருவாக்கியது.

2002ஆம் ஆண்டு தொடங்கி இவர் ஜோசப்சன்-சந்திப்பு கியூபிட்சுடன் குவாண்டம் கணினியைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் பணியாற்றத் தொடங்கினார்.[7]

2004இல், இவர் கலிஃபோர்னியா சாந்தா பார்பரா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்கு இவர் 2017ஆம் ஆண்டு வரை பரிசோதனையியல் இயற்பியலுக்கான வொர்ஸ்டர் இருக்கையில் இருந்தார். 2014ஆம் ஆண்டில், மார்ட்டினிசு மற்றும் அவரது குழுவினர் கூகுள் நிறுவனத்தால் முதல் பயன்தரத்தக்க குவாண்டம் கணினியைக் கட்டமைக்கும் நோக்கத்திற்காக பணியமர்த்தப்பட்டனர்.[8]

2014ஆம் ஆண்டில், கூகுள் குவாண்டம் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மார்ட்டினிசு மற்றும் குழுவினரை மீக்கடத்தும் கியூபிட்சைப் பயன்படுத்தி ஒரு குவாண்டம் கணினியைக் கட்டமைக்கும் பணிக்காக பல மில்லியன் டாலர் தொகை செலவில் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அறிவித்தது.[9]

2019ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள் மார்ட்டினிசு குழுவினர் இயற்கையின் இயல்பு தொடர்பான ”ஒரு நிரலாக்கத்தக்க மீக்கடத்தும் செயன்முறையாக்கியைப் பயன்படுத்தி குவாண்டம் மீஉயர்வு நிலை” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.[10] இந்த ஆய்வறிக்கை வெளியீட்டின் போது இவர்கள் 53 குவாண்டம் பிட்ஸ் குவாண்டம் கணினியினைப் பயன்படுத்தி குவாண்டம் மீஉயர் நிலையை எவ்வாறு எய்தினோம் என்பதை விளக்கினர்.[11] ஏப்ரல் 2020இல் மார்ட்டினிசு ஆலோசகர் தரநிலையில் பணி ஒதுக்கீட்டிற்குப் பிறகு கூகுள் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகினார்.[8][12]

2020 செப்டம்பர் 29 அன்று, மிசெல் சிமன்சு என்பவரால் நிறுவப்பட்ட புத்தாக்க நிறுவனத்தின் மார்ட்டினிசு சிலிக்கன் குவாண்டம் கணிப்பியல் தொடர்பான பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்காகச் சென்றார்.[13]

கௌரவங்களும் விருதுகளும்

[தொகு]

2014ஆம் ஆண்டில் இவர் பிரிட்சு இலண்டன் நினைவு விருதினை மிசேல் தெவோரே, இராபர்ட் ஜெ. இச்சோயல்காப் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.[14]

2021ஆம் ஆண்டில், இவர் ஜான் இசுடூவர்ட்டு பெல் பரிசினை குவாண்டம் இயங்கியல் மற்றும் அதன் பயன்பாடுகளில் காணப்படும் அடிப்படைச் சிக்கல்கள் என்ற தலைப்பிலான ஆய்விற்காகப் பெற்றார்.[15]

2025ஆம் ஆண்டில், இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை தனது ஆய்வு நெறியாளர் ஜான் கிளார்க், மிசேல் தெவோரே ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட “ஒரு மின்சார சுற்றில் பேரளவு குவைய புரை ஊடுருவு மின்னோட்ட சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீடு” என்ற தலைப்பிலான கூட்டு ஆய்வுப்பணிக்காகப் பெற்றார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "John M. Martinis". nobelprize.org. 7 October 2025. Retrieved 7 October 2025.
  2. "John Martinis | Department of Physics | UC Santa Barbara". www.physics.ucsb.edu. Archived from the original on 2025-10-07. Retrieved 2025-10-07.
  3. "Nobel Prize in Physics 2025". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-07.
  4. Clarke, J.; Cleland, A. N.; Devoret, M. H.; Esteve, D.; Martinis, J. M. (1988-02-26). "Quantum mechanics of a macroscopic variable: the phase difference of a josephson junction". Science 239 (4843): 992–997. doi:10.1126/science.239.4843.992. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17815701. 
  5. Hassinger, Sebastian (2024-09-11). The New Quantum Era (in ஆங்கிலம்). "O'Reilly Media, Inc.". ISBN 978-1-0981-4938-3.
  6. Welty, Richard P.; Martinis, John M. (March 1993). "Two-stage integrated SQUID amplifier with series array output". IEEE Transactions on Applied Superconductivity 3: 2605–2608. doi:10.1109/77.233523. பன்னாட்டுத் தர தொடர் எண்:1051-8223. https://ui.adsabs.harvard.edu/1993ITAS....3.2605W/abstract. 
  7. Frederic Lardinois (2014-09-02). "Google Partners With UCSB To Build Quantum Processors For Artificial Intelligence". techcrunch.com. Retrieved 2025-01-18.
  8. 8.0 8.1 "Google's Top Quantum Scientist Explains In Detail Why He Resigned". forbes.com. 2020-04-30. Retrieved 2025-01-18.
  9. Finley, Klint (2014-09-05). "The Man Who Will Build Google's Elusive Quantum Computer". Wired. ISSN 1059-1028. Retrieved 2019-11-02.
  10. Arute, Frank; Arya, Kunal; Babbush, Ryan; Bacon, Dave; Bardin, Joseph C.; Barends, Rami; Biswas, Rupak; Boixo, Sergio et al. (October 2019). "Quantum supremacy using a programmable superconducting processor". Nature 574 (7779): 505–510. doi:10.1038/s41586-019-1666-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:31645734. 
  11. "Shtetl-Optimized » Blog Archive » Quantum supremacy: the gloves are off". 23 October 2019. Retrieved 2019-11-04.
  12. "Google's Head of Quantum Computing Hardware Resigns". Wired (in ஆங்கிலம்). ISSN 1059-1028. Retrieved 2020-04-21.
  13. "Ex-Google quantum chief joins Simmons' silicon startup". InnovationAus (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-29. Retrieved 2020-09-29.
  14. "Fritz London Memorial Prize". phy.duke.edu. Retrieved 21 April 2020.
  15. "John Stewart Bell Prize". Retrieved 3 May 2021.
  16. "Nobel Prize in Physics 2025". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_எம்._மார்ட்டினிசு&oldid=4396769" இலிருந்து மீள்விக்கப்பட்டது