ஜான்ஸ் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான்ஸ் சட்டம் (Jones Law) என்று அறியப்படும் பிலிப்பீன்சு சுயாட்சி சட்டம் 1916 ஆகத்து 29 ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் தோற்றுவிக்கப்பட்டது. 1902 ஆம் ஆண்டின் பிலிப்பீன்சு ஆர்கானிக் சட்டத்திற்குப் பதிலாக ஜான்சு சட்டம் கொண்டுவரப்பட்டது. 1934 ஆம் ஆண்டு வரை இச்சட்டமே பிலிப்பீன்சின் அரசமைப்புச் சட்டமாகவும் செயல்பட்டது. 1934 ஆம் ஆண்டில் டைடிங்சு-மெக்டஃபி சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பின்னர் பிலிப்பீன்சு பொதுநலவாய அரசை அமைக்கவும், அதன் மூலம் பிலிப்பீனிய விடுதலைக்கும் வழிவகுத்தது. ஜான்சு சட்டத்தின் மூலம் பிலிப்பீனின் முதலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "The Philippine Autonomy Act". Corpus Juris online Philippine law library. Archived from the original on 2009-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13. {{cite web}}: External link in |publisher= (help)
  • "Philippine Autonomy Act (Act of Congress of August 29, 1916)". Filipiniana.net Digital Library. Archived from the original on 2009-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-01-29. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்ஸ்_சட்டம்&oldid=3480174" இலிருந்து மீள்விக்கப்பட்டது