ஜான்சி ஜேம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்ஜான்சி ஜேம்ஸ்

ஜான்சி ஜேம்சு (Jancy James) இந்தியாவின் கேரள மாநிலத்தில் காசர்கோடு அருகே அமைந்துள்ள கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார். இவர் வைக்கத்தில் பிறந்தார். இவர் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பணிநாடுநர் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

முன்னதாக கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் ஜான்சி பணியாற்றியுள்ளார். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்ட போது கேரளாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முதல் பெண்மணியும் இவரே ஆவார்.[1] இவர் எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

ஜான்சி ஜேம்சு, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய ஆய்வு உதவித்தொகையின் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினையும், கனடாவின் தொராண்டோ பல்கலைக்கழகத்தில், ஆசிரிய ஆராய்ச்சி உறுப்பினராகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் கேரள மாநில சாகித்ய அகாதமியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Hindu : Kerala / Thiruvananthapuram News : Jancy James to head new university
  2. J, Poornendu (2018-09-13). "Dr. Jancy James (Department of English)". St.Teresa’s College (Autonomous) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்சி_ஜேம்சு&oldid=3665768" இலிருந்து மீள்விக்கப்பட்டது