ஜானி லீவர்
சானி லீவர் Johnny Lever | |
---|---|
![]() 2012 ஆம் ஆண்டு ஜானி லீவர் | |
பிறப்பு | சான் பிரகாசுராவ் சனுமாலா 14 ஆகத்து 1957 கனிகிரி பிரகாசம் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1975 தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சுசாதா சானி லீவர் (தி. 1984) |
பிள்ளைகள் | சேமி லீவர் செஸ்ஸி லீவர் |
உறவினர்கள் | ஜிம்மி மோசஸ் (சகோதரர்) |
ஜானி லீவர் (ஆங்கிலம் : Johnny Lever) அல்லது சான் பிரகாசுராவ் சனுமாலா என்னும் இயற்பெயர் கொண்ட ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.[1] மற்றும் இந்தி மொழிகளில் முதல் மேடைநகைச்சுவை நடிகர்களில் சானிலீவரும் ஒருவராவார். சிறந்த நகைச்சுவைப் பாத்திரத்திற்கான பிலிம்பேர் விருதுக்காக பதின்மூன்று பிலிம்பேர் விருது பரிந்துரைகளைப் பெற்றுள்ளார் , மேலும் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தீவானா மசுதானா மற்றும் 1998 ஆம் ஆண்டு வெளியான துல்கே ராசா ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் 1984 ஆம் ஆண்டில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய இவர், முன்னூறுக்கும் அதிகமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.[2][3]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]சான் பிரகாசுராவ் சனுமாலா என்பவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி நகரத்தில் ஆகஸ்ட் 14, 1957 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு மாலா கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவரது தந்தை இந்துசுதான் யுனிலீவர் ஆலையில் இயக்காளியாகப் பணியாற்றியுள்ளார். பின்னர் சானிலீவரும் ஆறு ஆண்டுகள் இதே ஆலையில் தொழிலாளியாக பணிச் செய்து வந்தார். மேலும் இவர் மும்பையின் மாட்டுங்காவில் அமைந்துள்ள கிங்ஸ் சர்க்கில் பகுதியில் வசித்து வந்தார். இவருடைய தாய்மொழி தெலுங்காக இருந்த போதிலும் இவருக்கு பஞ்சாபி, உருது, இந்தி, ஆங்கிலம், மராத்தி, துளுவம் போன்ற மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவராவார்.[5] இவரது குடும்பத்தில் மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர், இதில் இவர்தான் மூத்தவர். சானி தனது ஆரம்பக் கல்வியை ஆந்திரா கல்விச் சங்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஆனால் சானி லீவரின் வீட்டின் மோசமான குடும்ப நிதிச்சுமைக் காரணமாக, அவரால் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பின்னர் மும்பையின் தெருக்களில் பேனாக்களை விற்பதும், அக்காலத்திய பிரபல இந்தி திரைப்பட நடிகர்களைப் போல் நடித்தும், அவர்களின் பாடல்களுக்கு நடனமாடியும் வாழ்வாதாரம் தேடினார். இவரது இளம் பருவத்தை ஐதராபாத்தின் பழைய நகரப் பகுதியிலுள்ள பழமையான சுற்றுப்புறங்களில் ஒன்றான யாகுத்புரா பகுதியில் கழித்தார். அங்கேயே இவர் காமெடி நடிப்பின் தனித்துவமான பாணியை கற்றுக்கொண்டார். இந்துசுதான் யூனிலீவர் நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகளை நையாண்டி செய்தபோது, தொழிலாளர்கள் அவரை ஜானி லீவர் என்று அழைக்கத் தொடங்கினர். பின்னர் அதுவே திரைத்துறைக்கு வந்தபோது, இந்தப் பெயரையே இறுதியில் அவரது திரைப் பெயராக மாறியது.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1984 ஆம் ஆண்டு சுசாதா லீவரை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதியினருக்கு செமி மற்றும் செச்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[7] இவருடையத் தம்பி சிம்மி மோசசூம் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் பலகுரல் கலைஞர் ஆவார்.[8]
சானிலீவர் ஒரு கிறித்தவர். இவருடைய மாற்றத்தைக் குறித்து கேட்டபோது, சானிலீவர் இவ்வாறாகப் பதிலளித்தார்.
"அது கடவுளின் சித்தமே. நான் எப்போதும் சமயப் பக்தியுடன் வாழ்ந்தவன். ஆனால், ஒரு சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றியது. என் மகனுக்கு தொண்டைக் கட்டி (புற்றுநோய்) இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். நான் முற்றிலும் உதவியற்றுப்போய், கடவுளிடம் மன்றாடினேன். திரைப்படத் துறையில் எனது பணியை நிறுத்திவிட்டு, நாள்முழுவதும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் சோதனை செய்யும் போது, புற்றுநோய் முற்றாக மறைந்திருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அன்று முதல், எனக்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கியது."[9] [10]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]ஆண்டு | பகுப்பு | வேலை | முடிவு |
---|---|---|---|
பிலிம்பேர் விருதுகள் | |||
1994 | சிறந்த நகைச்சுவை வேடத்தில் நடிப்புக்கான விருது | பாசிகர் | பரிந்துரை |
1996 | கரண் அர்சூன் | பரிந்துரை | |
1997 | இராஜா இந்துஸ்தானி | பரிந்துரை | |
1998 | தீவானா மசுதானா | வெற்றி | |
சுடாய் | பரிந்துரை | ||
1999 | துல்கே இராசா | வெற்றி | |
குச் குச் ஹோத்தா ஹை | பரிந்துரை | ||
2000 | அனாரி நம்பர் 1 | பரிந்துரை | |
2001 | குன்வாரா | பரிந்துரை | |
பிர் பி தில் கேய் இந்துசுதானி | பரிந்துரை | ||
2002 | அச்னபீ | பரிந்துரை | |
2003 | கம்ராசு | பரிந்துரை | |
2004 | கோயி... மில் கயா | பரிந்துரை | |
ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகள் | |||
2001 | சிறந்த நகைச்சுவை வேடத்தில் நடிப்புக்கான விருது | பிர் பி தில் கேய் இந்துசுதானி | பரிந்துரை |
2002 | அச்னபீ | பரிந்துரை | |
2004 | கோயி... மில் கயா | பரிந்துரை | |
2010 | டி டானா டான் | பரிந்துரை | |
இந்திய தொலைக்காட்சி அகாதமி விருதுகள் | |||
2018 | சிறந்த நகைச்சுவை நடிகர் | பார்ட்னர்ஸ் ட்ரபிள் ஹோ கயி டபுள் | பரிந்துரை |
தயாரிப்பாளர் சங்க திரைப்பட விருதுகள் | |||
2018 | சிறந்த நகைச்சுவை வேடத்தில் நடிப்புக்கான விருது | காவுசுஃபுல் 2 | பரிந்துரை |
திரை விருதுகள் | |||
1997 | சிறந்த நகைச்சுவை நடிகர் | இராஜா இந்துஸ்தானி | வெற்றி |
2002 | அச்னபீ | பரிந்துரை | |
2003 | ஆவாரா பாகல் தீவானா | பரிந்துரை | |
2011 | கோல்மால் 3 | பரிந்துரை | |
ஜீ திரைப்பட விருதுகள் | |||
2002 | சிறந்த நகைச்சுவை நடிகர் | லவ் கே லியே குச் பி கரேகா | வெற்றி |
2004 | கோயி... மில் கயா | பரிந்துரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shyam Benegal; William Van Der Heide (12 June 2006). Bollywood Babylon: Interviews With Shyam Benegal. Berg. pp. 196–. ISBN 978-1-84520-405-1. Archived from the original on 11 October 2013. Retrieved 31 May 2012.
- ↑ "Comedy is serious business: Johnny Lever". The Hindu. 7 January 2009 இம் மூலத்தில் இருந்து 12 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140312212529/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/comedy-is-serious-business-johnny-lever/article369772.ece.
- ↑ Awaasthi, Kavita (2012-03-03). "Johnny Lever feels his talent is under-utilised". Hindustan Times. Retrieved 2021-12-09.
- ↑ चैहान, Jitesh Arpan Chauhan जीतेश सिंह (1 February 2015). "Dalits in Indian cinema". Forward Press (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 31 March 2021.
- ↑ "Find Bollywood Actor Johnny Lever Filmography, Movies, Pictures and Videos". Jointscene.com. Archived from the original on 7 January 2012. Retrieved 2012-03-05.
- ↑ "This johnny's levered to fame". financialexpress.com. Indian Express Newspaper (Bombay) Ltd. Archived from the original on 25 October 2014. Retrieved 25 October 2014.
- ↑ "Johnny Lever's kid is college fest fave". Hindustantimes.com. 14 August 2010. Archived from the original on 12 April 2011. Retrieved 2011-06-14.
- ↑ "Johnny Lever, Bollywood Johnny Lever, Johnny Lever Movies". Surfindia.com. 7 January 1950. Archived from the original on 27 May 2008. Retrieved 2011-06-15.
- ↑ John, Ali (17 April 2012). "Johnny Lever turns preacher". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 1 March 2014. Retrieved 24 June 2014.
- ↑ "Johnny Lever's son has battled cancer, hence goes viral on social media". Ajjtak. https://www.aajtak.in/trending/photo/jesse-lever-son-of-jhonny-lever-can-debut-in-bollywood-481114-2017-07-12-1.
வெளியிணைப்புகள்
[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜானி லீவர்
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் ஜானி லீவர்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Ajjtak
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை