உள்ளடக்கத்துக்குச் செல்

ஜானலின் காஸ்டெலினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானலின் காஸ்டெலினோ
202-ல் ஜானலின் காஸ்டெலினோ
பிறப்புஜானலின் ஜோசப் காஸ்டெலினோ
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • மருத்துவர்
செயற்பாட்டுக்
காலம்
2018–தற்போது வரை
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வலைத்தளம்
www.janalynncastelino.com

ஜானலின் காஸ்டெலினோ(Janalynn Castelino) (பிறப்பு அக்டோபர் 18,1998) ஓர் பன்மொழி பாடகரும், பாடலாசிரியரும் மருத்துவரும் ஆவார்.[1] ரிதம் அண்ட் புளூஸ் , பரப்பிசை ஆகியவற்றில் இவரது பணிகள் இருக்கிறது.[2][3] ஆங்கிலம், இலத்தீன், இத்தாலி, எசுப்பானியம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் பாடல்களை பதிவு செய்துள்ளார்.[4][5]

இளமை வாழ்க்கை

[தொகு]

ஜானலின் ஜோசப் காஸ்டெலினோ என்ற பெயரில் 18 அக்டோபர் 1998 அன்று ஒரு உரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில், உலோர்னா மற்றும் ஜோசப் காஸ்டெலினோ ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[6] இவர் இத்தாலிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[7][8] இவர் தனது 3 வயதிலிருந்தே தேவாலயப் பாடகர் குழுவில் பாடினார்.[4][9] மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.[10]

தொழில் வாழ்க்கை

[தொகு]

காஸ்டெலினோ மருத்துவம் படிக்கும்போது ஒரு பொழுதுபோக்காக தனது யூடியூப் ஊடகத்தில் பாடல்களை பதிவேற்றினார்.[4] 2018 ஆம் ஆண்டில் பிரபலமானார். பின்டே தில் (காதல் பாடல்) என்ற இசைக் காணொளி 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[11][12] இவரது இசைக் காணொளிகள் 11 க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப்பின் பிரபலமான தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.[2] ஜானலினின் டேக்அவே பை தி செயின்ஸ்மோகர்ஸ் என்ற பாடல் ஊடகங்களால் 'பாப் ட்விஸ்டுடன் பொழுதுபோக்கு' என்று விவரிக்கப்பட்டது.[12][13]

ஜானலின் காஸ்டெலினோ 2021 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாடலாசிரியர் என்ற பாடல் எழுதுவதை உள்ளடக்கிய ஒரு அமெரிக்க இருமாத இதழில் இசைத் திட்டங்களைப் பற்றி பேசினார்.[1][14][15] அதே ஆண்டில், எல் 'ஐடியா பத்திரிகையின் ஆங்கில பதிப்பிலும் இடம்பெற்றார்.[2]

2023 ஆம் ஆண்டில், ஜானலின் தனது 'பெல்லா சி டோர்மி' என்ற இத்தாலிய-நாட்டுப்புறப் பாடல்களை உலக இசையின் கூறுகளுடன் கலந்து, சிசிலிய பேச்சுவழக்கில் பாடினார்.[16] இந்த தனிப்பாடல் உயர்ந்த தொனியில் குரல்கள் மற்றும் அடுக்கு இசைவுகளால் வகைப்படுத்தப்பட்டது.[17][18]

ஜானலின், பட் வித்அவுட் யூ என்ற பாடலை மார்ச் 21,2025 அன்று வெளியிட்டார்.[19][20] இந்த பாடல் ஊடக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையானவிமரசனத்தைப் பெற்றது.[21][22][23]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bringin' it Backwards: Interview with Janalynn Castelino". American Songwriter (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-15. Retrieved 2021-08-31.
  2. 2.0 2.1 2.2 "Janalynn Castelino Is Being More Focused On Herself". L'Idea Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-06. Retrieved 2021-08-31.
  3. "Janalynn Castelino". Napster (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-09-01.
  4. 4.0 4.1 4.2 "Q&A: Indian vocalist and doctor Janalynn Castelino breaking stereotypes". Riff Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-19. Retrieved 2021-08-31.
  5. Magazine, On: Yorkshire (2024-04-16). "A Q&A with Janalynn Castelino". On: Yorkshire Magazine (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-04-27.
  6. Crasto, Laura (2021-06-09). "Janalynn Castelino: An Authentic Voice And A Unique Story". Italics Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-31.
  7. mediterraneangirlsinmusic (2024-09-26). "Janalynn Castelino releases new single Drama". MGIM (in ஆங்கிலம்). Retrieved 2024-10-16.
  8. GirlTalkHQ (2024-10-15). "Singer/Songwriter Janalynn Castelino Embarks on A New Musical Chapter With Heartfelt Single 'Drama'". GirlTalkHQ (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-10-30.
  9. "Janalynn Castelino: Interview". Unclear Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 23 June 2021. Retrieved 2021-08-31.
  10. Bartolozzi Bellantuono, Arianna (2025-04-03). "Intervista a Janalynn Castelino: il suo nuovo singolo But Without You, le sue radici italiane e la sua carriera". MGIM (in இத்தாலியன்). Retrieved 2025-05-12.
  11. Binte Dil (Female Love-Ballad Version) | Janalynn Castelino (in ஆங்கிலம்), retrieved 2021-08-31
  12. 12.0 12.1 "Popular YouTuber 'Janalynn Castelino' recreates 'Takeaway'". Free Press Journal (in ஆங்கிலம்). Retrieved 2021-08-31.
  13. Takeaway - The Chainsmokers, Illenium | Janalynn Castelino (in ஆங்கிலம்), retrieved 2021-10-06
  14. "Janalynn Castelino - MusicBrainz". musicbrainz.org. Retrieved 2021-09-01.
  15. "Janalynn Castelino". iHeartRadio (in ஆங்கிலம்). Retrieved 2021-09-01.
  16. Bella Ci Dormi - Janalynn Castelino | Album | AllMusic (in ஆங்கிலம்), retrieved 2024-04-29
  17. Dyer, Harvey (2023-08-31). "Janalynn Castelino Releases Enchanting Italian-Folk Single "Bella Ci Dormi"". All-Noise (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-04-27.
  18. Krystal, Fernandez (2023-09-08). "Guest Menu Item | Janalynn Castelino Releases Enchanting Italian-Folk Single "Bella Ci Dormi"". Eat This Music (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Retrieved 2024-04-27.
  19. But Without You - Single by Janalynn Castelino on Apple Music (in அமெரிக்க ஆங்கிலம்), 2025-03-22, retrieved 2025-03-25
  20. "Janalynn Castelino Announces New Single 'But Without You': Here's the Release Date". The Journal of Music | Music in Ireland: News, Reviews and Opinion (in ஆங்கிலம்). Retrieved 2025-03-25.
  21. "Janalynn Castelino Releases 'But Without You' : A Soul-searching Exploration". The Journal of Music | Music in Ireland: News, Reviews and Opinion (in ஆங்கிலம்). Retrieved 2025-03-25.
  22. "Janalynn Castelino delivers dynamics of love and longing in new single 'But Without You'". Music-News.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-25.
  23. Bailey, Adam (2025-03-25). "Janalynn Castelino Explores Emotional Depths On New Single 'But Without You'". Music Talkers - Latest Music News & Artist Exposure (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-03-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானலின்_காஸ்டெலினோ&oldid=4396872" இலிருந்து மீள்விக்கப்பட்டது