ஜானகிராமன் மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியத் தமிழரான ஜானகிராமன் மாணிக்கம் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும், சுதந்திர எழுத்தாளரும் ஆவார். தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரான இவர், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவழியினரான தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்தவர். அத்துடன், அவற்றைத் தானே அனுபவித்து உணர்ந்தவர். இந்த அனுபவங்களூடாக அவர் சமூகச் சிந்தனையுள்ள எழுத்தாளராக உருவானார். இவர் எழுதிய "மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை" என்னும் ஆய்வு நூல், மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றை ஆவணப்படுத்துவதில் முக்கியமான ஒரு நூல் எனலாம். இந்த ஆய்வு நூலுக்காக இவர் சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சிறப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஜானகிராமன் மாணிக்கம் மலேசியாவில் உள்ள சிலாங்கூரின் பத்தாங் பெர்ஜூந்தைப் பகுதியில் உள்ள ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் பிறந்தார். இவரது தாய் தந்தையர் தோட்டத் தொழிலாளர்கள்.

1970களில், சிலங்கூர் பத்தாங் பெர்ஜூந்தை பாத்திமா சமூக மேம்பாட்டு மையத்தில், அருட்திரு ஒய். கரோப்பின் வழிகாட்டுதலில் ஆய்வுத் துறையில் தேர்ச்சி பெற்றார். மலேசியாவில் தோட்டப்புறங்கள், குடிசைப் பகுதிகள், போன்ற சமூகப்பணி தேவைப்படும் இடங்களில் 35 ஆண்டுகள் இவர் பணியாற்றியுள்ளார். இதனால், 1984ம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற ஊரக மேம்பாடு தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் வாய்ப்புப் பெற்றார்.[2]

குறிப்புக்கள்[தொகு]

  1. "சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என்.சங்கரய்யா தேர்வு". தினமணி. சூலை 13, 2013. http://www.dinamani.com/tamilnadu/2013/07/13/சின்னப்பபாரதி-அறக்கட்டளை-வ/article1681635.ece?service=print. பார்த்த நாள்: 14 பெப்ரவரி 2015. 
  2. மாணிக்கம், ஜானகிராமன்., 2011, பின் அட்டை.

உசாத்துணைகள்[தொகு]

  • மாணிக்கம், ஜானகிராமன்., மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை: மலேசிய இந்தியச் சமூகத்தின் துயரங்களும் போராட்டங்களும், நாடுதழுவிய மனித வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், மலேசியா, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகிராமன்_மாணிக்கம்&oldid=1806116" இலிருந்து மீள்விக்கப்பட்டது