ஜாசுபர் பூனைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாசுபர் பூனைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
போயிகா
இனம்:
போ, ஜாசுபிடியா
இருசொற் பெயரீடு
போயிகா ஜாசுபிடியா
(துமேரில் மற்றும் பலர், 1854)
வேறு பெயர்கள்

திரைகிளிபோடான் ஜாசுபிடியம் துமேரில் மற்றும் பலர், 1854
டைப்சசு ஜாசுபிடியா ஜாம், 1863
திப்சடோமார்பசு ஜாசுபிடியசு பெளலெஞ்சர், 1896

ஜாசுபர் பூனைப்பாம்பு என்று அழைக்கப்படும் போயிகா ஜாசுபிடியா (Boiga jaspidea) அசாதாரணமான பின்புற-பற்கள் கொண்ட கொலுப்ரிட் சிற்றினமாகும்.[2]

விளக்கம்[தொகு]

ஜாசுபர் பூனைப்பாம்பு சிறிய மற்றும் மெல்லிய உடல் சிவப்பு நிறத்திலிருந்து சாக்லேட் பழுப்பு நிறமாக இருக்கும். இதில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் மஞ்சள் நிறத்தில் உள்ள வயிற்றுச் செதில்களைத் தவிர முழு உடலையும் உள்ளடக்கியது. கூடுதலாக, மங்கலான கருப்பு பக்கவாட்டு பட்டைகள், மற்றும் வயிற்றுச்செதில்கள் வெள்ளை புள்ளிகளுடன் உள்ளன. இந்த வகைப் பூனைப்பாம்பு அதிகபட்சமாக 1.5 மீ (4.9 அடி) நீளம் வரை வளரக்கூடியது.

புவியியல் வரம்பு[தொகு]

இந்தோனேசியா, போர்னியோ, தீபகற்ப மலேசியா, தாய்லாந்து[3] மற்றும் தெற்கு வியட்நாமில் இது காணப்படுகிறது.[4]

வாழிடமும் நடத்தையும்[தொகு]

ஜாசுபர் பூனைப்பாம்பு வெப்பமண்டலக் காடுகளிலும், சில சமயங்களில் தாழ் நிலப் புதர்களிலும் வாழ்கிறது. கரையான் கூடுகளில் மூன்று முட்டைகள் வரை இடுகின்றன. இந்த மழுப்பலான பாம்பைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை.[5]

உணவு[தொகு]

ஜாசுபர் பூனை பாம்பு காடுகளில் தரைப்பல்லி மற்றும் பிற சிறிய பாம்புகளை உணவாக உண்ணுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.thainationalparks.com/species/boiga-jaspidea
  2. Ziegler, Thomas; Nikolai L. Orlov, Thomas T. Giang, Nguyen Quang Truong, Nguyen Thien Tao, Le Khac Quyet, Nguyen Vu Khoi and Vu Ngoc Thanh 2010. New records of cat snakes, Boiga Fitzinger, 1826 (Squamata, Serpentes, Colubridae), from Vietnam, inclusive of an extended diagnosis of Boiga bourreti Tillack, Le & Ziegler, 2004. Zoosyst. Evol. 86 (2): 263–274
  3. Cox, Merel J.; Hoover, M.F.; Chanhome, Lawan & Thirakhupt,Kumthorn 2012. The Snakes of Thailand. Chulalongkorn University Museum of Natural History, 845 pp.
  4. "Boiga jaspidea". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  5. Harrington, Sean M; Jordyn M de Haan, Lindsey Shapiro, Sara Ruane 2018. Habits and characteristics of arboreal snakes worldwide: arboreality constrains body size but does not affect lineage diversification. Biological Journal of the Linnean Society 125 (1): 61–71

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசுபர்_பூனைப்பாம்பு&oldid=3653130" இலிருந்து மீள்விக்கப்பட்டது