ஜாசின் மக்களவைத் தொகுதி
| ஜாசின் (P139) மலேசிய மக்களவைத் தொகுதி | |
|---|---|
| Jasin (P139) Federal Constituency in Malacca | |
ஜாசின் மக்களவைத் தொகுதி (P139 Jasin) | |
| மாவட்டம் | ஜாசின் மாவட்டம் |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 96,208 (2022)[1][2] |
| வாக்காளர் தொகுதி | ஜாசின் தொகுதி |
| முக்கிய நகரங்கள் | பெம்பான், ரிம், செர்க்காம், மெர்லிமாவ், சுங்கை ரம்பை |
| பரப்பளவு | 479 ச.கி.மீ[3] |
| முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
| கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
| மக்களவை உறுப்பினர் | சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) |
| மக்கள் தொகை | 134,531[4] |
| முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
| இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ஜாசின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jasin; ஆங்கிலம்: Jasin Federal Constituency; சீனம்: 野新国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P139) ஆகும்.[5]
ஜாசின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ஜாசின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
ஜாசின் மாவட்டம்
[தொகு]ஜாசின் மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். கிழக்கே ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டம்; வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; மேற்கில் அலோர் காஜா மாவட்டம்; மற்றும் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகியவை எல்லைகளாக உள்ளன. ஜாசின் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன் தலைநகரம் ஜாசின்.
மலாக்கா மாநிலத்தில் ஜாசின் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டமாகும். மாநில பரப்பளவில் 41.47% அளவு கொண்டது. கீசாங் நதி ஜாசின் நகரத்தின் வழியாகச் செல்கிறது. கீசாங் நதி, ஜாசின் புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் மையப் பகுதியில் பிரிக்கிறது. ஜாசின் மாவட்டம் ஏறக்குறைய 75% தட்டையான சமவெளி கொண்டது. எந்தப் பகுதியும் கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை.[7]
ஜாசின் மக்களவைத் தொகுதி
[தொகு]| ஜாசின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
|---|---|---|---|---|
| மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| 1974-ஆம் ஆண்டில் ஜாசின் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
| 4-ஆவது மக்களவை | P096 | 1974–1978 | அகமட் இசுனின் (Ahmad Ithnin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
| 5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் காபார் பாபா (Abdul Ghafar Baba) | ||
| 6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
| 7-ஆவது மக்களவை | P114 | 1986–1990 | ||
| 8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
| 9-ஆவது மக்களவை | P124 | 1995–1999 | ||
| 10-ஆவது மக்களவை | 1999–2004 | அபு சாகார் இசுனின் (Abu Zahar Ithnin) | ||
| 11-ஆவது மக்களவை | P139 | 2004–2008 | முகமட் சாயிட் யூசோப் (Mohammad Said Yusof) | |
| 12-ஆவது மக்களவை | 2008–2013 | அகமட் அம்சா (Ahmad Hamzah) | ||
| 13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
| 14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
| 15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
ஜாசின் தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| சுல்கிப்லி இசுமாயில் (Zulkifli Ismail) | பெரிக்காத்தான் நேசனல் | 27,893 | 35.95 | 35.95 | |
| ரோசுலான் அகமட் (Roslan Ahmad) | பாரிசான் நேசனல் | 27,571 | 35.53 | 7.47 ▼ | |
| அருண் முகமட் (Harun Mohamed) | பாக்காத்தான் அரப்பான் | 21,674 | 27.93 | 14.72 ▼ | |
| முகமட் தாவூத் நாசிர் (Mohd Daud Nasir) | தாயக இயக்கம் | 460 | 0.59 | 0.59 | |
| மொத்தம் | 77,598 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 77,598 | 99.07 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 731 | 0.93 | |||
| மொத்த வாக்குகள் | 78,329 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 96,208 | 81.42 | 4.25 | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
| மூலம்: [9] | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. Retrieved 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. Retrieved 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. Retrieved 20 ஜூலை 2024.
{{cite web}}: Check date values in:|access-date=(help) - ↑ "Latar Belakang". Portal Rasmi Majlis Perbandaran Jasin (MPJ). 2 November 2015. Archived from the original on 9 பிப்ரவரி 2021. Retrieved 12 June 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "chinapress". live.chinapress.com.my. Retrieved 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). Retrieved 9 July 2024.