ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்
Zhangjiajie Glass Bridge
Location
சீனா, ஹுனான், ஜாங்ஜியாஜீ
அமைவுகள்:29°23′55″N 110°41′54″E / 29.3987°N 110.6982°E / 29.3987; 110.6982ஆள்கூறுகள்: 29°23′55″N 110°41′54″E / 29.3987°N 110.6982°E / 29.3987; 110.6982
Construction
Type:நடைபாலம்
Opened:20, ஆகத்து 2016
Maximum
height:
360 m (1,180 ft)
Maximum
width:
14 m (46 ft)

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் என்பது சீனாவின், வுலிங்யுவான் பகுதியில் ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் உள்ள வான்நடைப் பாலம் ஆகும். கண்ணாடிப் பாலமானது சுற்றுலாப்பயணிகளைக் கவருவதற்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் தரைப்பகுதியானது கண்ணாடியால் ஆனதாக, கீழே பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது திறக்கப்பட்டபோது உலகின் மிக நீண்டதும், மிகப்பெரிய கண்ணாடி பாலமுமாக இது இருந்தது. இப்பாலமானது 2016 ஆகஸ்ட் 20 அன்று பொது மக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலமானது மொத்தம் 430 மீட்டர்கள் (1,410 ft) நீளமும், 6 மீட்டர்கள் (20 ft) அகலமும் கொண்டதாக, தரைமட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர்கள் (980 ft) உயரத்தில் அமைந்துள்ளது. [1] இப்பாலமானது சீனாவின் நடு ஹுனான் மாகாணத்தில் சாங்ஜியாஜ் தேசிய வன பூங்காவில் உள்ள இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குக்குக்கு இடையில் நீண்டுள்ளது. இந்த பாலத்தில் ஒரு நேரத்தில் 800 பேர் வரை நடந்து செல்லும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இசுரேலிய கட்டிடக் கலைஞரான ஹய்ம் டோட்டன் வடிவமைத்துள்ளார். [2]

இந்தக் கண்ணாடிப் பாலத்தைக் கட்டுவதற்காக இதன் இருபுறங்களிலும் பிரம்மாண்டமான நான்கு ஆதரவுத் தூண்களை பொறியாளர்கள் அமைத்துள்ளனர். இந்தக் கண்ணாடிப் பாலத்தில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட உறுதியான கண்ணாடிகளானது உலோகச் சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் மூன்று அடுக்குக் கனமும் இரண்டு அங்குல தடிமனும் கொண்டவை. இந்தக் கண்ணாடி பாலத்தின் அடிப்பகுதியில் இடத்தில் மூன்று ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பாலத்திலிருந்து 285 அடி உயரத்திலிருந்து பங்கீ ஜம்பிங் சாகசத்தில் ஈடுபட முடியும். இதுவே உலகில் உயரமான பங்கீ ஜம்பிங் உள்ள இடமாக கருதப்படுகிறது. [3]

இந்தப் பாலத்தின் பராமரிப்புக் குழுவின் கூற்றின்படி, இப்பாலமானது அதன் வடிவமைப்பு, கட்டுமானம் போன்றவற்றில் பத்து உலக சாதனைகளைப் புரிந்துள்ளது. [4]

தற்போதைய நிலையில் உலகின் நீண்ட கண்ணாடிப் பாலம் என்ற தகுதியை ஹாங்காங்குக்கு அருகில் உள்ள, ஏபெய் மாகாணத்தில் உள்ள ஒரு கண்ணாடிப் பாலம் அடைந்துள்ளது. [5]

மூடுதலும் மறு திறப்பும்[தொகு]

பாலம் திறந்த பிறகு எதிர்பார்க்காத அளவுக்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குவியத் தொடங்கியதால் பாலம் திறந்த பதிமூன்றாவது நாளே 2016 செப்டம்பர் மாதத்தில் பாலம் சில நாட்கள் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [6] பாலத்தில், ஒரு நேரத்தில் 800 பேர் நடக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் 8,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாளைக்கு 80,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். [7] இதனால் பாலத்தைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன நிறுத்துவிட வசதி, நுழைவுக் கட்டணம், பயணிகளுக்கான சேவை ஆகியவை அதிகாரிகளால் சரிசெய்யப்பட்டன. இதன்பிறகு 2016 செப்டம்பர் 30 அன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 
  2. . 
  3. "Zhangjiajie Grand Canyon Glass Bridge". 2018-10-24 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "World's longest, highest glass bridge to open". 16 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. 王建芬. "World's longest glass bridge ready to open - Chinadaily.com.cn".
  6. Chris Graham. China's record-breaking glass bridge closes after 13 days 'due to overwhelming demand'. https://www.telegraph.co.uk/news/2016/09/03/chinas-record-breaking-glass-bridge-closes-after-13-days-due-to/. பார்த்த நாள்: 16 November 2016. 
  7. "Why Did the Zhangjiajie Grand Canyon Glass Bridge Suddenly Close?". 16 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "World's highest glass bridge to reopen after one-month overhaul". 11 August 2017 அன்று பார்க்கப்பட்டது.