ஜாங்ஜியாஜி கண்ணாடி நடை பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாங்ஜியாஜி கண்ணாடி நடை பாலம் (Zhangjiajie Glass Bottom Bridge) சீனாவின் யுனான் மாகாணத்தில் யூண்டா மலைப் பகுதியில் ஜாங்ஜியாஜி தேசிய பூங்காவில் 984 அடி உயரம், 1410 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட கண்ணாடியை அடிபாகமாக கொண்ட நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடியால் ஆன நடை பாலம் ஆகும். இப்பாலம் 20 செப்டம்பர் 2015 அன்று பொதுமக்கள் உபயோகிக்க திறக்கப்பட்டது. இப்பாலத்தை இஸ்ரேலிய கட்டிட கலைஞர் ஹைம் டொடன் என்பவர் வடிவமைத்து எழுப்பியுள்ளார். ஒரே நேரத்தில் 800 பேர் இப்பாலத்தை கடக்கலாம்.[1][2][3][4]

5 அக்டோபர் 2015 அன்று இப்பாலத்தில் கீறல்கள் தென்பட்டதால், இப்பாலத்தை கடக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World's Longest &Highest Glass-bottom Bridge Opening in Zhangjiajie - See more at: http://www.cnto.org/worlds-longest-highest-glass-bottom-bridge-opening-in-zhangjiajie/#sthash.glRWDcvM.dpuf". Archived from the original on 2015-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-10-08. {{cite web}}: External link in |title= (help)
  2. Zhangjiajie Grand Canyon glass bottom bridge: World's highest see-through skywalk gives views from 300m
  3. World's longest and highest glass-bottom bridge to open in China
  4. World's Longest and Highest Glass Bottom Bridge to Be Unveiled in Chinese National Park
  5. http://www.usatoday.com/story/news/nation-now/2015/10/07/terror-3500-feet-glass-walkway-china-cracks/73501866/