உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக் (குரங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்
ஜேம்ஸ் வைட் (இடது) ஜாக்குடன்
இனம்பபூன்
வகைசக்மா பபூன்
பால்ஆண்
இறப்பு1890
தென்னாப்பிரிக்கா
Resting placeஅல்பானி அருங்காட்சியகம்
Occupationஊனமுற்ற ரயில்வே சிக்னல்மேனுக்கு உதவியாளர்.
செயற்பட்ட ஆண்டுகள்9
Notable roleரயில்வே சிக்னலர்
உரிமையாளர்ஜேம்ஸ் வைட்

ஜாக் (இறப்பு 1890) என்பது தென்னாப்பிரிக்காவில் ரயில்வே சமிக்ஞையாளராக இருந்த ஊனமுற்றவரான ஜேம்ஸ் வைட் என்பவரின் உதவியாளராக இருந்த ஒரு சாக்மா பபூன் வகைக் குரங்கு ஆகும். [1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

தென்னாப்பிரிகாவின் கேப் டவுன்-போர்ட் எலிசபெத் இரயில்வே சேவையில் பணிபுரிந்த இரண்டு கால்கள் ஊனமுற்ற சமிக்ஞையாளராக (சிக்னல்மேன்) இருந்த ஜேம்ஸ் வைட் என்பவரின் செல்லப்பிள்ளையாகவும் உதவியாளராகவும் ஜாக் என்ற குரங்கு இருந்தது. ஓடும் இரயிலில் பெட்டி விட்டு பெட்டி தாவுவதில் வல்லவர் என்பதால் ஜேம்ஸ் "ஜம்பர்" என்று செல்லமாக அழைக்கப்பட்டார். அப்படி தாவும்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் கீழே விழுந்து முழங்காலுக்குக் கீழே தனது இரண்டு கால்களையும் இழந்தார். [2] கட்டையால் ஆன செயற்கை கால்களுடன் இரயில்வேயில் பணிபுரிந்து கொண்டுருந்தார். ஒரு நாள் சந்தைக்குச் சென்றிருந்தபோது பபூன் வகை குரங்கு ஒன்று வண்டியை இழுத்துச் செல்வதையும் வேறு வேலைகள் செய்வதையும் கண்டார். தன் சர்க்கர நாற்காலியைத் தள்ளுவதற்கும் தனக்கு பணிகளில் உதவும் என்பதற்காகவும் 1881 ஆம் ஆண்டில் ஜாக்கை அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கிவந்தார். தனது சக்கர நாற்காலியைத் தள்ளவும், தன் மேற்பார்வையின் கீழ் இரயில்வே சிக்னல்களை இயக்கவும் அதற்குப் பயிற்சி அளித்தார்.

போர்ட் எலிசபெத்துக்கு அருகிலுள்ள உய்டென்ஹேஜில் இரயில்வே சிக்னல்களை ஒரு பபூன் குரங்கு இயக்கிவந்ததை கண்டு யாரோ ஒருவர் புகார் தெரிவித்ததை அடுத்து, அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கியது. [3]

ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், ஜாக்கின் வேலைத் திறனைக் கண்டு அதிசயத்தனர். பின்னர் அதை அதிகாரப்பூர்வமாக பணியமர்த்த முடிவு செய்தனர். அதற்கு ஒரு நாளைக்கு இருபது செண்ட் சம்பளமும், வாரத்திற்கு அரை பாட்டில் பீயரும் வழங்கப்பட்டது. ரயில்வே நிறுவனத்தில் பணிபுரிந்த ஒன்பது ஆண்டுகளில், ஜாக் ஒரு தவறு கூட செய்ததில்லை என்பது பரவலாகப் பேசப்படுகிறது. [4] [5]

ஜாக் 1890 இல் காசநோயால் இறந்தது. [3] அதன் மண்டை ஓடு கிரஹாம்ஸ்டவுனில் உள்ள அல்பானி அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Conway Morris 2003, ப. 242.
  2. Williams, Michael (2 August 2012). "Stranger Than Fiction: Jack the Signalman". Knoxville Daily Sun. Archived from the original on 19 January 2020. Retrieved 2014-10-27.
  3. 3.0 3.1 Cheney & Seyfarth 2008, ப. 31.
  4. Wallechinsky 1975, ப. 697.
  5. "Signalman Jack: The Baboon Who Worked for the Railroad—and Never Made a Mistake". www.mentalfloss.com (in ஆங்கிலம்). 2018-10-11. Retrieved 2020-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_(குரங்கு)&oldid=4290148" இலிருந்து மீள்விக்கப்பட்டது