ஜாக் கிராஃபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் கிராஃபோர்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 12 210
ஓட்டங்கள் 469 9,488
மட்டையாட்ட சராசரி 22.33 32.60
100கள்/50கள் 0/2 15/43
அதியுயர் ஓட்டம் 74 232
வீசிய பந்துகள் 2,203 35,423
வீழ்த்தல்கள் 39 815
பந்துவீச்சு சராசரி 29.48 20.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 57
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 12
சிறந்த பந்துவீச்சு 5/48 8/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/0 162/0
மூலம்: [1]

ஜாக் கிராஃபோர்ட் (Jack Crawford, பிறப்பு: டிசம்பர் 1, 1886, இறப்பு: மே 2, 1963 ) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 210 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 - 1908 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கிராஃபோர்டு ஒரு பள்ளி மாணவனாக இருந்தபோது ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் 21 வயதிற்கு முன்னர் இங்கிலாந்துக்காக தேர்வுத் துடுப்பட்டப் போட்டியில் விளையாடினார், மேலும் 1907-08 இல் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்காக (எம்.சி.சி) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தார். இவர் இங்கிலாந்தில் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இருப்பினும் இவருக்கு விளையாட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக விமர்சகர்கள் கருதினர். அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில், முதல் தர ஆட்டங்களில் 1,000 ஓட்டங்கள் மற்றும் 100 இழப்புகளைக் கைப்பற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜாக் கிராஃபோர்டு டிசம்பர் 1, 1886 அன்று சர்ரேயின் கோல்ஸ்டன், கேன் ஹில் என்ற இடத்தில் பிறந்தார்.இவரது தந்தை ரெவ் ஜான் சார்லஸ் கிராஃபோர்டு மற்றும் இவரது தாய் ஆலிஸின் மூன்று மகன்களில் இளையவர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரிகளும் இருந்தனர்.இதில் கிராஃபோர்டு மூத்தவர் ஆவார்.கேன் ஹில் மருத்துவமனையில், கிராஃபோர்டு பிறந்தார். [1] இவர் துடுப்பாட்ட சூழலில் வளர்ந்தார். இவரது தந்தை மற்றும் மாமா, பிராங்க் கிராஃபோர்ட், கென்டிற்காக முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினர். இவரது சகோதரர்கள் விவியன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் முதல் தரத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். [2] இவரது முழு குடும்பமும் துடுப்பாட்டம் விளையாடியது. அதனால் அவர்கள் இவரை துடுப்பாட்டம் விளையாட சிறுவயது முதல் ஊக்குவித்தனர்.11 ஆம் வயது முதல் இவர் பெரிய வீரர்களுடன் துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார்.[3]

ஈஸ்ட்போர்னில் உள்ள க்ளெங்ரோவ் பள்ளியில் படித்த பிறகு, [4] கிராஃபோர்டு ஹென்லி-ஆன்- தேம்ஸில் உள்ள செயின்ட் வினிஃப்ரெட் பள்ளிக்குச் சென்றார், அங்கு துடுப்பாட்ட அணியில் தனது இரண்டு ஆண்டுகளில், 2,093 ஓட்டங்கள் எடுத்து 366 இழப்புகளை வீழ்த்தினார் . [5] 1902 ஆம் ஆண்டில், க்ராஃபோர்ட் ரெப்டன் பள்ளிக்கு மாறினார். தனது முதல் ஆண்டில் துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். [5] இவர் 1905 இல் பள்ளியை விட்டு வெளியேறும் வரை முதல் லெவன் அணியில் இருந்தார். அணியின் வெற்றிகளில் இவரது பங்கு கணிசமாக இருந்தது. விஸ்டன் துடுப்பாட்ட வீரர்களின் நாட்குறிப்பில் 1906 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அறிக்கையில், முந்தைய 40 ஆண்டுகளின் சிறந்த மூன்று பள்ளி மாணவர் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.

1904 ஆம் ஆண்டில், கிராஃபோர்டு ரெப்டன் அணி சார்பாக சிறப்பாக விளையாடினார். அந்த ஆண்டில் இவர் 759 ஓட்டங்களும் 75 இழப்புகளையும் கைப்பற்றினார். ஒப்பீட்டளவில் மற்ற வீரர்களை விட இவரின் துடுப்பாட்ட திறன் அதிகமாக இருந்தது.பள்ளித் துடுப்பாட்ட அணியின் வெற்றிகளில் இவரின் பங்கு அதிகமானதாக இருந்தது. விசுடன் நாட்குரிப்பு இவரை தொழில்முறை போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளர் எனத் தெரிவித்தது. துவக்கத்தில் மித விரைவு வீச்சாளராக இருந்த இவர் பின்னர் விரைவு வீச்சளராக ஆனார். [6] [7] [8] 1904 ஆம் ஆண்டில் இவர் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் தேர்வானார்.இவர் பல ஆண்டுகள் அணியின் தலைவராக இருந்தார். ஆனால் சில போட்டிகளுக்கு மட்டுமே இவர் தலைவர் பொறுப்பில் இருந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. Burns, Chapter 1, Location 100.
  2. "John Crawford (Cricketer of the Year)". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1907. பார்க்கப்பட்ட நாள் 26 April 2011.
  3. Burns, Chapter 1, Location 119.
  4. Burns, Chapter 1, Location 143.
  5. 5.0 5.1 "John Crawford (Cricketer of the Year)". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1907. பார்க்கப்பட்ட நாள் 26 April 2011.
  6. "John Crawford (Cricketer of the Year)". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1907. பார்க்கப்பட்ட நாள் 26 April 2011.
  7. Green (1988), p. 146.
  8. "Obituaries in 1963 (Crawford's obituary)". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1964. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_கிராஃபோர்ட்&oldid=2885170" இலிருந்து மீள்விக்கப்பட்டது