ஜாக் இடிலன் கிரேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் இடிலான் கிரேசர்
பிறப்புசெப்டம்பர் 3, 2003 (2003-09-03) (அகவை 20)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை
உறவினர்கள்பிரையன் கிரேசர் (மாமா)

ஜாக் டிலான் கிரேசர் (ஆங்கில மொழி: Jack Dylan Grazer) (பிறப்பு: செப்டம்பர் 3, 2003)[1][2][3] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கௌரவ வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் இட் என்ற இசுடீபன் கிங் எழுதிய நாலை தழுவி எடுக்கப்பட்ட இட் (2017) மற்றும் இட் சாப்டர் 2 (2019) போன்ற படங்களில் எடி காஸ்ப்ராக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டும் முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைப்படங்களான ஷசாம்![4] (2019) மற்றும் ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற படங்களில் 'பிரெடி பிமேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 2021 பிக்சார் திரைப்படமான லூகா என்ற படத்தில் ஆல்பர்டோவுக்கு குரல் கொடுத்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்படமான ரோன் கோன் ரோங் இல் பார்னிக்கு குரல் கொடுத்தார். இவரை 2018 ஆம் ஆண்டில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் 18 வயதிற்குட்பட்ட முதல் 30 நட்சத்திரங்களில் ஒருவராக பட்டியலிட்டது.[5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிரேசர் செப்டம்பர் 3, 2003 இல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பெவர் மற்றும் கவின் கிரேசர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது மாமா தயாரிப்பாளர் பிரையன் கிரேசர் ஆவார்.[6] ஜூலை 2021 இல், இன்ஸ்ட்டாகிராம் நேரடியின் போது தான் ஒரு இருபால்சேர்க்கையாளர் என்று அறிவித்தார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "jackdgrazer on Instagram". Archived from the original on December 26, 2021 – via Instagram.
  2. "francesca.scorsese on Instagram" – via Instagram.
  3. "Jack Dylan Grazer Talks 'Shazam'". ET Canada. March 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 25, 2019.
  4. Ramos, Dino-Ray (August 22, 2020). "'Shazam!': Zachary Levi And Cast Reveal Title Of Sequel, Remain Tight-Lipped On Details – DC FanDome". Deadline Hollywood. Archived from the original on August 23, 2020. பார்க்கப்பட்ட நாள் May 27, 2021.
  5. Sandberg, Bryn Elise (August 8, 2018). "Hollywood's Top 30 Stars Under Age 18". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் March 21, 2019.
  6. Carroll, Lloyd (August 24, 2017). "What's new on traditional TV". Queens Chronicle.
  7. Sam Damshenas (July 2, 2021). "Luca star Jack Dylan Grazer says he's "bi" and updates pronouns to he/they". Gay Times. பார்க்கப்பட்ட நாள் July 2, 2021.
  8. Josh Milton (July 3, 2021). "Luca star Jack Dylan Grazer just came out as bisexual in the best way". PinkNews. பார்க்கப்பட்ட நாள் July 4, 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_இடிலன்_கிரேசர்&oldid=3417904" இலிருந்து மீள்விக்கப்பட்டது