உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக்குலின் அலெமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்குலின் அலெமானி
பிறப்புஜாக்குலின் மைக்கேல் அலெமானி
பெப்ரவரி 24, 1989 (1989-02-24) (அகவை 35)
ஸ்கார்ஸ்டேல். நியூயார், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
பணிபத்திரிகையாள, செய்தி நிருபர், தொகுப்பாளர்
பெற்றோர்ஜாக்கின் அலெமானி
எலன் அலெமானி

ஜாக்குலின் மைக்கேல் அலெமானி (Jacqueline Michele Alemany) (பிறப்பு பிப்ரவரி 24, 1989) [1] ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும் அரசியல் நிருபரும் ஆவார், இவர் தி வாசிங்டன் போஸ்ட்டின் காங்கிரசின் நிருபராக உள்ளார். [2] இவர் முன்பு அதிகாலையில் வெளிவரும் பவர் அப் என்பதில் செய்திமடலை எழுதியுள்ளார். [3] 2021 இல், தி வாஷிங்டன் போஸ்டின் அரசியல் செய்திமடலான தி எர்லி 202 இன் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நியூயார்க்கின் ஸ்கார்ஸ்டேலில் பிறந்த இவர் ஸ்கார்ஸ்டேல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். [5] எலன் அலெமானி மற்றும் ஜோவாகின் "ஜாக்" அலெமானி ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தாயார் இத்தாலிய குடியேறியவர்களின் வழித்தோன்றல் [1] மேலும் இவரது தந்தை எசுப்பானியாவிலிருந்து வந்த காத்தலோனியா குடியேற்றவாசி ஒருவரின் மகன். [6] இவரது தாயார் சிஐடி குழுமத்தின் தலைவராகவும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். [6]

2011 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்றார். [7] கல்லூரி நாட்களில் ஆர்வர்டு கிரிம்சன் பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தார்.[5][8]

பத்திரிகை வாழ்க்கை[தொகு]

2012 இல் நிருபராக பணியமர்த்தப்படுவதற்கு முன்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், அரசியல் மற்றும் பொதுச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் , சிபிஎஸ் செய்திப்பக்கத் திட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [9] [10] சிபிஎஸ் செய்தியில், 2016 குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிப் பேசினார். [11] [12] [13]

2017 இல் சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளையின் உதவித்தொகை வழங்கப்பட்டது [14]

தேசிய அரசியல், வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரசை மையமாகக் கொண்ட பவர் அப் என்ற அதிகாலை செய்திமடலில் எழதி வந்தார்..[15][16] பிறகு 2018 இல் தி வாஷிங்டன் போஸ்ட்டில் சேர்ந்தார். 2021 இல், இவர் காங்கிரசு நிருபராக நியமிக்கப்பட்டார். வோக் மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட்டில் பங்களிப்பாளராகவும் பணியாற்றினார். [17][18] செப்டம்பர் 2021 இல், தி வாஷிங்டன் போஸ்டின் காலை செய்திமடலான தி எர்லி 202 இன் தொகுப்பாளராகவும் பங்களிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[19]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Broughton, Kristin (September 26, 2017). "How Ellen Alemany is reinventing CIT". American Banker. https://www.americanbanker.com/news/how-ellen-alemany-is-reinventing-cit. "Alemany has two other children: Jackie, 25, who works as a reporter for CBS in Washington, D.C." 
 2. "The Washington Post hires White House reporter Jacqueline Alemany to anchor new early-morning newsletter "Power Up"". The Washington Post. 5 September 2018. https://www.washingtonpost.com/pr/wp/2018/09/05/the-washington-post-hires-white-house-correspondent-jacqueline-alemany-to-anchor-new-early-morning-newsletter-power-up/. 
 3. Jacqueline Alemany (23 October 2017). "How complicated is it to declare opioids a national emergency?". CBS News. https://www.cbsnews.com/news/how-complicated-is-it-to-declare-opioids-a-national-emergency/. 
 4. "Jacqueline Alemany, Washington, D.C., Anchor of The Early 202". The Washington Post. 2021. https://www.washingtonpost.com/people/jacqueline-alemany/. 
 5. 5.0 5.1 "Jackie Alemany". Harvard Crimson. Archived from the original on January 19, 2018. பார்க்கப்பட்ட நாள் January 19, 2018.
 6. 6.0 6.1 Lerner, Jane (October 29, 2015). "Village justice appointed in Scarsdale". The Journal News.
 7. "Jacqueline Alemany | HuffPost". HuffPost. பார்க்கப்பட்ட நாள் December 2, 2017.
 8. Daley, Nicholas (May 27, 2021). "Jackie Alemany". Harvard Crimson. https://www.thecrimson.com/article/2021/5/27/Alemany-Post-Player/. 
 9. "Jacqueline Alemany". International Women's Media Foundation. 2019. பார்க்கப்பட்ட நாள் September 23, 2019.
 10. Politico Staff. "BIRTHDAY OF THE DAY: Jacqueline Alemany, WaPo reporter and 'Power Up' anchor". POLITICO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
 11. "CBS News 2016 presidential campaign digital journalists". CBS News. September 16, 2015.
 12. "On a street in Ohio, defiant Democrats flock to Trump". CBS News.
 13. "New Hampshire: What It Takes In The Granite State". HuffPost.
 14. "African Great Lakes Reporting Fellows – International Women's Media Foundation (IWMF)". iwmf.org.
 15. "Jacqueline Alemany". International Women's Media Foundation. 2019. பார்க்கப்பட்ட நாள் September 23, 2019.
 16. Politico Staff. "BIRTHDAY OF THE DAY: Jacqueline Alemany, WaPo reporter and 'Power Up' anchor". POLITICO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
 17. "CBS News 2016 presidential campaign digital journalists". CBS News. September 16, 2015.
 18. "On a street in Ohio, defiant Democrats flock to Trump". CBS News.
 19. "African Great Lakes Reporting Fellows – International Women's Media Foundation (IWMF)". iwmf.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்குலின்_அலெமானி&oldid=3658983" இலிருந்து மீள்விக்கப்பட்டது