ஜாகீராபாத்

ஆள்கூறுகள்: 17°41′N 77°37′E / 17.68°N 77.62°E / 17.68; 77.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாகீராபாத்
நகரம்
Zaheerabad
ஜாகீராபாத் is located in தெலங்காணா
ஜாகீராபாத்
ஜாகீராபாத்
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஜாகீராபாத்தின் அமைவிடம்
ஜாகீராபாத் is located in இந்தியா
ஜாகீராபாத்
ஜாகீராபாத்
ஜாகீராபாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°41′N 77°37′E / 17.68°N 77.62°E / 17.68; 77.62
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
பெயர்ச்சூட்டுநவாப் முகமது ஜாகீருத்தீன் கான்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜாகீராபாத் நகராட்சி
பரப்பளவு[1]
 • நகரம்21.78 km2 (8.41 sq mi)
ஏற்றம்622 m (2,041 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • நகரம்71,166
 • அடர்த்தி3,300/km2 (8,500/sq mi)
 • பெருநகர்1,50,000
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்502220
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-TG
வாகனப் பதிவுTS–15

ஜாகீராபாத் (Zaheerabad or Zahirabad), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய தொழில் நகரம் ஆகும்.[3] இது மாவட்டத் தலைமையிடமான சங்காரெட்டிக்கு மேற்கே 56.4 கிலோ மீட்ட்ர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத் நகரத்திற்கு வடமேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. ஐதராபாத்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 65 ஜகீராபாத் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 13,824 வீடுகளும் கொண்ட ஜாகீராபாத் நகரத்தின் மக்கள் தொகை 71,166 ஆகும். அதில் ஆண்கள் 36,069 மற்றும் பெண்கள் 35,097 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,591 மற்றும் 1,185 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 51.83%, இசுலாமியர் 45.48%, கிறித்தவர்கள் 1.62% மற்றும் பிறர் 0.98% ஆகவுள்ளனர்.[4]

போக்குவரத்து[தொகு]

இருப்புப் பாதை[தொகு]

ஜாகீராபாத் தொடருந்து நிலையம்[5], ஐதராபாத், பெங்களூர், நாந்தேட், சீரடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, மச்சிலிப்பட்டினம் மற்றும் வாராங்கள் போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  3. "District Level Mandal wise list of villages in Medak district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  4. Zahirabad Population, Religion, Caste, Working Data Medak, Andhra Pradesh - Census 2011
  5. Zahirabad Train Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகீராபாத்&oldid=3930402" இலிருந்து மீள்விக்கப்பட்டது