ஜாகிர் கவுர்
ஜாகிர் கவுர் | |
---|---|
பிறப்பு | 15 அக்டோபர் 1954 பூட்னுரா லுபானா, ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | விவசாயம், சமூக சேவை, அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | எசு. சரண்ஜித் சிங் |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பகீரத் விருது |
வலைத்தளம் | |
http://bibijagirkaur.co.in/ |
பீபி ஜாகிர் கவுர் (Jagir Kaur) என்பவர் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார். சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார். இவர் இப்பதவிக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருமதி கவுரின் பெயரை மூத்த சிரோமணி அகாலி தள தலைவர் சுக்தேவ் சிங் பௌர் முன்மொழிந்தார். மற்றொரு சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு உறுப்பினரான ஹர்ஸ்விந்தர் சிங் வழிமொழிந்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. மார்ச் 1999 முதல் நவம்பர் 2000 வரை இப்பதவியில் கவுர் இருந்தார். கவுர் தனது மகள் கொலையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பதவி விலகினார்.[1] பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் கவுர் விடுவிக்கப்பட்டார்.[2]
26 முறை பதவி வகித்த அகாலி தலைவர் குர்சரண் சிங் தோஹ்ராவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பதவி காலியானது. தோஹ்ரா மார்ச் 2004-ல் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டபின் இறந்தார்.[3]
அரசியல்
[தொகு]ஜாகிர் கவுர் பஞ்சாபில் வலுவான ஆதரவாளர்களைக் கொண்ட சீக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் தீவிர உறுப்பினர் ஆவார். இவர் 1995-ல் இக்கட்சியில் சேர்ந்தார். இதன் பின்னர் கட்சியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1997-ல், இவர் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள போலாத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் சமூக நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாடு ஆகிய துறைகளுடன் சுற்றுலா மற்றும் கலாச்சார விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவர் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டபோது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். கணிதத்தில் ஆசிரியராக இருந்து சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.[4]
மகளின் மரணம்
[தொகு]ஜாகிர் கவுரின் மகள் அர்பிரீத் கவுர் 20 ஏப்ரல் 2000 அன்று மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.[5] மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை விசாரித்தது. ஜாகிர் கவுர் தனது மகள் ஓடிப்போனதற்குப் பதிலளிக்கும் வகையில் உத்தரவிடப்பட்ட ஒரு ஆணவக் கொலை என்று பரவலாகக் கருதப்பட்டது. ஜாகிர் கவுருக்கு இறுதியில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[6] 2017ஆம் ஆண்டில், பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது தண்டனையை நிறுத்திவைக்குமாறு பீபி ஜாகிர் கவுரின் வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.[7] பின்னர் 4 திசம்பர் 2018 அன்று நீதிமன்றம் கவுரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The case of a mother and daughter". Archived from the original on 6 October 2007. பார்க்கப்பட்ட நாள் 5 March 2007.
- ↑ 2.0 2.1 Malik, Saurabh (4 December 2018). "Bibi Jagir Kaur acquitted in daughter's death case". The Tribune.
- ↑ "The Hindu : National : Jagir Kaur is SGPC chief again". Archived from the original on 1 December 2007. பார்க்கப்பட்ட நாள் 5 March 2007.
- ↑ From a maths teacher to SGPC chief. Singh, Bajinder Pal. 17 March 1999. The Indian Express.
- ↑ Singh, Varinder (21 April 1999). ""Bibi's teenaged daughter dead Mystery shrouds circumstances"". The Tribune.
- ↑ Angre, Keti (31 March 2002). "Bibi Jagir Kaur jailed for role in daughter's kidnapping; murder charges dropped". NDTV.
- ↑ "No court relief for Bibi Jagir Kaur". The Hindu. 18 January 2017.