ஜாஃபா ஆரஞ்சு
ஜாஃபா ஆரஞ்சு |
---|
![]() எருசலேம் நகரின் மஹனே எஹூதா அங்காடியில் விற்பனைக்காக ஜாஃபா ஆரஞ்சுகள் |
கலப்பின பெற்றோர் |
'பெலேடி' ஆரஞ்சு × பெயரறியாதது |
வெளியீட்டு நிறுவனம் |
'ஜாஃபா' |
தோற்றம் |
உதுமானியப் பேரரசு பாலஸ்தீனத்தில் நடு-19-ஆம் நூற்றாண்டு (c. 1840கள்) |
ஜாஃபா ஆரஞ்சு அல்லது யாபா தோடம்பழம் (அரபு: برتقال يافا) அரபுப் பெயரால் ஷாமௌடீ ஆரஞ்சு என்றும் அறியப்படுவது குறைந்த விதைகளையும் தடித்த தோலையும் கொண்டு 'சிறப்பானதாகவும்' 'இனிமையும் அருமையும்' மிக்கதாகவும் அறியப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்ததாகவும் இருக்கும் ஒரு தோடம்பழ வகை.[1][2]
அரபு உழவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளர்க்கப்பட்ட இந்த வகை, இதனை முதன் முதலில் உருவாக்கி ஏற்றுமதி செய்த ஊரான ஜாஃபாவின் பெயரால் வழங்கப்பட்டுவருகிறது.[3] ஜாஃபா நகரின் முதன்மைக் கிச்சிலி பழ ஏற்றுமதியாக இந்தவகைப் பழங்களே இருந்தன. கொப்பூழ் மற்றும் நரந்தம் வகைகளுடன் மையத்தரை, தெற்கு ஐரோப்பா, மையக்கிழக்குப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மூன்று முதன்மை ஆரஞ்சு வகைகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது. சைப்பிரசு, ஈராக்கு, இஸ்ரேல், பாலஸ்தீன், லெபனான், சிரியா, ஜோர்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் ஜாஃபா ஆரஞ்சு பயிரிடப்படுகிறது.[4][5]
ஜாஃபா ஆரஞ்சுகள் இஸ்ரேலிலும் பாலஸ்தீனிலும் நவம்பருக்கும் மார்ச்சுக்கும் இடையில் அறுவடை செய்யப்படுகின்றன். விற்பனைப் பருவம் செப்டம்பரிலிருந்து ஏப்ரல் வரை இருக்கும். ஓராண்டின் விளைச்சலில் பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இஸ்ரேலிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த வகையையும் உள்ளிட்ட கிச்சிலி பழங்கள் பெருமளவில் ஏற்றுமதியாகின்றன.[6]
1950-களிலும் 1960-களிலும் இஸ்ரேல் நாட்டின் சின்னமாக ஜாஃபா ஆரஞ்சுகள் இருந்தன.[7] ஜாஃபா ஆரஞ்சுகளால் டெல் அவீவ்-யாபோ நகர் பெரிய ஆரஞ்சு என்ற புனைப்பெயரைப் பெற்றது.[8]
சான்றுகள்[தொகு]
துணைநூற்பட்டியல்[தொகு]
- Aderet, Ofer (2015-06-21). "The forgotten story of the original Jaffa oranges". Haaretz.com. 2022-05-11 அன்று பார்க்கப்பட்டது.
- Basan, Ghillie (2007). The Middle Eastern Kitchen. Hippocrene Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7818-1190-3. https://books.google.com/books?id=-7wnpIi3VRwC&q=%22jaffa+orange%22&pg=PA83.
- Issawi, Charles (2006). An Economic History of the Middle East and North Africa (Reprint ). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-37998-9. https://books.google.com/books?id=t2UESIFL0tkC&q=%22jaffa+orange%22+history&pg=PA127.
- Krämer, Gudrun (2008). A history of Palestine: from the Ottoman conquest to the founding of the state of Israel (Illustrated ). Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-11897-0. https://books.google.com/books?id=bWjwcoSdoiAC&q=%22jaffa+orange%22+history&pg=PA91.
- Ladaniya, Milind S. (2008). Citrus fruit: biology, technology and evaluation (Illustrated ). Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-374130-1. https://books.google.com/books?id=zaOK8bsvENQC&q=jaffa+orange+beladi&pg=PA48.
- Marshall Cavendish (2006). World and Its Peoples: The Middle East, Western Asia, and Northern Africa (Illustrated ). Marshall Cavendish. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7614-7571-0. https://books.google.com/books?id=j894miuOqc4C&q=jaffa+orange+israel+exports&pg=PA938.
- Page, Martin (2008). Growing Citrus: The Essential Gardener's Guide (Illustrated ). Timber Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88192-906-5. https://books.google.com/books?id=tk7DaWYvuPAC&q=jaffa+orange+%22oval+shape%22&pg=PA99.