உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாஃபர் இப்னு அபி தாலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாஃபர் இப்னு அபி தாலிப்
جَعْفَرُ ٱبْنُ أَبِي طَالِبٍ
ஜாஃபர் இப்னு அபி தாலிப்
பிறப்புஅண். 590 பொது ஊழி[1]
மக்கா, ஹெஜாஸ்
இறப்புஅண். 629 பொது ஊழி
முஃதா, பைசாந்தியப் பேரரசு (இன்றைய ஜோர்தான்)
இறப்பிற்கான
காரணம்
முஃதா போரில் ஷஹீத் இறப்பு
கல்லறைஅல்-மசார், முஃதா, அஷ்ஷாம் (சிரியா பகுதி)
அறியப்படுவதுஉறவினர் மற்றும் முஹம்மது நபி அவர்களின் தோழர்
பட்டம்அத்-தய்யார் (اَلطَّيَّارُ)
பெற்றோர்அபூ தாலிப்
பாத்திமா பின்த் அசாத்
பிள்ளைகள்அப்துல்லாஹ் இப்ன் ஜாஃபர்
முஹம்மது இப்ன் ஜாஃபர்
அவ்ன் இப்ன் ஜாஃபர்
உறவினர்கள்முகம்மது நபி (தந்தை வழி மாமா மகன்)
அகீல் இப்னு அபி தாலிப் (சகொதரர்)
அலீ (சகொதரர்)
தாலிப் இப்னு அபி தாலிப் (சகொதரர்)
ஃபாகிதா பிந்த் அபி தாலிப் (சகொதரி)
ஜுமானா பிந்த் அபி தாலிப் (சகொதரி)
ராய்தா பிந்த் அபி தாலிப் (சகொதரி)

ஜாஃபர் இப்னு அபி தாலிப் (அரபு மொழி: جَعْفَرُ ٱبْنُ أَبِي طَالِبٍ‎, Jaʿfar ibn Abī Ṭālib சி. 590-629 கிபி), மேலும் ஜாஃபர் அத்-தய்யார் என்றும் அறியப்பட்டவர் (அரபு மொழி: جَعْفَرُ ٱلطَّيَّارُ‎ அதாவுது, 'ஜாஃபர் எனும் பறக்க இருப்பவர் [சொர்க்கத்தில் '). இவர் இஸ்லாமின் முஹம்மது நபி அவர்களின் தோழர் மற்றும் உறவினர். அலியின் மூத்த சகோதரர் ஆவார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜாபர் அபு தாலிப் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் பாத்திமா பின்த் ஆசாத் ஆகியோரின் மூன்றாவது மகன், எனவே முஹம்மது நபி அவர்கள் இவருக்கு மாமா மகன் உறவு. அவரது மூத்த சகோதரர்கள் தாலிப் மற்றும் அகீல்; அவரது இளைய சகோதரர்கள் அலி இப்னு அபி தாலிப் மற்றும் துலாய்க்;[2] மற்றும் அவரது சகோதரிகள் ஃபாகிதா, ஜுமானா மற்றும் ராய்தா.[3]

அவரது பிறந்த இடமான மக்காவில் வறட்சி ஏற்பட்டபோது, அபு தாலிப் தனது குடும்பத்தை உதவ முடியவில்லை. எனவே அவரது சகோதரர் அப்பாஸ், இளம் ஜாஃபரிற்கு பொறுப்பேற்றார்.[4]

ஜாஃபர், ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை தழுவியவர் ஆவார்.[5] அவர் 614–615 இல் இஸ்லாத்தை தழுவிய அஸ்மா பின்த் உமைஸை மணந்தார்.[6]

அபிசீனியாவுக்கு இடம்பெயர்வு[தொகு]

மக்காவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டபோது, அவர்களில் பலர் அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்தனர். ஜாஃபர் 616 இல் இரண்டாவது அலையில் சேர்ந்துகொண்டார்.[7] அங்கு அவர்கள் நஜாஷீ, ஆஷாமா இப்னு அபஜர் ஆகியோரின் பாதுகாப்பைப் பெற்றனர், மேலும் அங்கு இறைவனை தடையின்றி தொழுக முடிந்தது.[8]

ஜாஃபரூம் அஸ்மாவும் அபிசீனியாவில் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களுக்கு அங்கு மூன்று மகன்கள் பிறந்தனர்: அப்துல்லாஹ், முஹம்மது மற்றும் அவ்ன்.[6]

குறைசி பிரதிநிதி[தொகு]

குறைசிகள், அரேபியாவை விட்டு இடம்பெயர்வதற்க்கான அவர்களின் நோக்கங்கள்குறித்து சந்தேகம் எழும்பியது. அதற்க்காக, அங்கு இடம்பெயர்ந்தர்வர்களை மீண்டும் மெக்கா கொண்டுவர நஜாஷீ மன்னரிடம் பேச்சுவார்த்தைக்காக, அப்துல்லா இப்ன் அபி ரபியா மற்றும் அம்ர் இப்ன் அல் ஆஸ் இருவரையும் அனுப்பினார்கள். அவர்கள் நஜாஷீ மற்றும் அவரின் அதிகாரிகளுக்கு, தோல் பொருட்களின் அன்பளிப்புகளை மற்றும் முஸ்லிம்களைப் பற்றித் தவறான குற்றசாட்டுகளை வழங்கினர்.[9] நஜாஷீ பதிலளித்தார், அவர் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார், எனவே கதையின் மறு பக்கத்தைக் கேட்காமல் அவர்களை ஒப்படைக்க முடியாது என்று. நஜாஷீ மன்னருக்குப் பதிலளிக்க முஸ்லிம்கள் அழைக்கப்பட்டபோது, ஜாஃபர் அவர்களின் (முஸ்லிம்கள்) பிரதிநிதி ஆக இருந்தார்.[10]

நஜாஷீ, அவர்களிடம் தனது (நஜாஷீயின் கிறித்தவ) மதத்திலோ அல்லது வேறு எந்த மதத்திலோ நுழையாமல், தங்கள் மக்களைக் கைவிட்ட மதம் எது என்று கேட்டார்.[10] ஜாஃபர் பதிலளித்தார்: "நாங்கள் ஒரு நாகரிகமற்ற மக்களாக இருந்தோம். சத்தியத்தைப் பேசும்படி கட்டளையிட்ட ஒரு தூதரை இறைவன் எங்களுக்கு அனுப்பினான்; எங்கள் செயல்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்; பின்னி இருக்கும் உறவுகள் மற்றும் மென்மையான விருந்தோம்பல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்; மற்றும் குற்றங்கள் ரத்தம் சிந்துவவையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று. அருவருப்பான செயல்களைச் செய்வதற்கும், பொய்களைப் பேசுவதற்கும், அனாதைகளின் சொத்தை விழுங்குவதற்கும், தூய்மையான பெண்களை இழிவுபடுத்துவதற்கும், அவர் நம்மைத் தடைசெய்தார். படைத்த இறைவனை மட்டும் வணங்கவும், அவனுடன் எதையும் இணைக்க வேண்டாம் என்றும் அவர் நமக்குக் கட்டளையிட்டார், மேலும் தொழுகை, கோடை(சகாத் தர்மம்) மற்றும் நோன்பு [இஸ்லாத்தின் கடமைகளை விளக்கினார்] பற்றிய கட்டளைகளை அவர் நமக்குக் கொடுத்தார். ஆகவே, அவர்மீதும், அல்லாஹ்விடமிருந்து அவர் எங்களிடம் கொண்டு வந்ததையும் நாங்கள் நம்பினோம், அவர் என்ன செய்யச் சொன்னாரோ அதைப் பின்பற்றுகிறோம், அவர் எங்களைத் தடைசெய்ததை நாங்கள் தவிர்க்கிறோம். " [11]

முஹம்மது இறைவனிடமிருந்து பெற்ற எதையும் ஜாஃபர் தன்னிடம் வைத்திருக்கிறாரா என்று நஜாஷீ கேட்டார். ஈசா (இயேசு) மற்றும் அவரது தாயார் மரியம் (மரியா) ஆகியோரின் கதையை விவரிக்கும் குர்ஆனில் சூரா மரியமின் முதல் பகுதியை ஜாஃபர் அவருக்காக ஓதினார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும், "நஜாஷீ தனது தாடி ஈரமாக இருக்கும் வரை அழுதார், ஆயர்கள் தங்கள் ஏட்டு சுருள்கள் ஈரமடையும் வரை அழுதனர்." ஒருபோதும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்யமாட்டேன் என்று நஜாஷீ கூறினார்.[12]

அந்த இரண்டு குறைசி பிரதிநிதிகள், முஸ்லிம்கள் இயேசுவை ஒரு படைப்பு (படைத்த இறைவன் அல்ல) என்று அழைத்ததாகக் குற்றம் சாட்டினர், எனவே நஜாஷீ ஜாஃபரிடம் இயேசுவைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டார். ஜாஃபர் பதிலளித்தார்: "எங்கள் இறை தூதர் அவர் (இயேசு) இறைவனின் அடிமை, இறை தூதர், ஆவி மற்றும் இறை வார்த்தை என்று கூறுகிறார், இறைவன் அருளப்பட்ட கன்னி மரியாவுக்குள் இயேசுவை செலுத்தினார்." [12]

இந்த நேரத்தில் நஜாஷீ குறைசிகளின் பரிசுகளை "லஞ்சம்" என்று அழைத்தார், மேலும் "அவர்கள் அவருடைய இருப்பை விட்டு வெளியேறினர்." முஸ்லிம்கள் "சிறந்த பாதுகாப்பில் வசதியாக" நஜாஷீ அவர்களுடன் தொடர்ந்து வாழ்ந்தனர்.[13]

வெளிநாட்டு பிரச்சாரம்[தொகு]

ஜாஃபர் அபிசீனியாவை விட்டு மற்ற நாடுகளில் பிரச்சாரத்திற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிட்டகாங் - மணிப்பூர் - திபெத்து - ஹொத்தான் - சீனா பிராந்தியத்திற்கான பயணத்தில் அவர் சாத் இப்னு அபி வக்காஸ் மற்றும் பிறருடன் சென்றார். பாலைவனச்சோலை-நகரமான ஹொத்தானின் முஸ்லிம்கள் (சின்ஜியாங் மாகாணத்தில், 9.7 கிலோமீட்டர்கள்), தக்லமகன் பாலைவனத்திற்கு இல் இருந்து தெற்கில்,[14] திபெத்துக்கு மேற்கில், ஜாஃபர் அவர்களின் தோற்றத்தை அறியலாம்.[15] அதன்பிறகு ஜாஃபர் அபிசீனியாவுக்குத் திரும்பினார். இருப்பினும் அர்னால்ட் "இந்தக் கூற்றுக்கு ஒரு சிறிய வரலாற்று துணை கூட இல்லை" என்று கூறுகிறார்.[16]

அரேபியாவுக்குத் பின் திரும்புதல்[தொகு]

628 நூற்றாண்டின் கோடையில், இடம்பெயர்ந்த கடைசி முஸ்லிம்கள் அபிசீனியாவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் சேர்ந்தார்கள். ஜாஃபர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அவர்களில் இருந்தனர்.[17]

மதீனா வரும்பொழுது, முகமது மதீனாவின் கைபரில் உள்ளதாக ஜாஃபர் கேள்விப்பட்டார். ஜாஃபர் உடனடியாக இராணுவத்தில் சேர புறப்பட்டார், முஹம்மது போரில் வெற்றி பெற்று திரும்பி வரும்போதுதான் அங்கு வந்தார். முஹம்மது அவரைச் சொற்களால் இப்படி வரவேற்றார்: "எந்த நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று எனக்குத் தெரியவில்லை - ஜாஃபரின் வருகையோ அல்லது கைபரைக் கைப்பற்றுவதோ!" [18]

ஜாஃபர் மதீனாவில் தன்னார்வ தொண்டு செயல்களால் பிரபலமானவர். அபு ஹுரைரா நினைவு கூர்ந்தார்: "எல்லா மக்களில், ஏழைகளுக்கு மிகவும் தாராளமாக இருந்தவர் ஜாஃபர் இப்னு அபி தாலிப். அவர் எங்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்குக் கிடைத்ததை எங்களுக்கு வழங்குவார். வெற்று மடிந்த தோல் பைகளை (வெண்ணெய் நிறைந்த) கூட அவர் எங்களுக்கு வழங்குவார், அதை நாங்கள் பிரித்து அதில் உள்ளதை நக்குவோம். " [19]

முஃதா போர்[தொகு]

செப்டம்பர் 629 நூற்றாண்டில், சிரியாவில் பைசாந்தியப் படைகளை எதிர்கொள்ள முஹம்மது அவர்கள் ஒரு இராணுவத்தை அணிதிரட்டினார்,[20] ஏனெனில் பபைசாந்திய ஆளுநர் ஒருவர் தனது தூதர்களில் ஒருவரைக் கொன்றார்.[21] அவர், சயீத் இப்னு ஹரிதாவை இராணுவத் தளபதியாக நியமித்து அறிவுறுத்தினார்: "சயீத் காயமடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, ஜாஃபர் இப்னு அபு தாலிப் கட்டளைகள் கொடுப்பதில் ஏற்றுக்கொள்வார். ஜாஃபர் கொல்லப்பட்டால் அல்லது காயமடைந்தால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவரது இடத்தைப் பிடிப்பார். அப்துல்லாஹ் கொல்லப்பட்டால், முஸ்லிம்கள் தாங்களே ஒரு தளபதியாக நியமிக்கட்டும். "

முஸ்லிம்கள் பைசாந்தியப் படையை முஃதாவில் சந்தித்தனர்,[22] அங்கு அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். போரில் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம்களில் சயீத் இப்னு ஹரிதாவும் ஒருவர், பின்னர் ஜாஃபர் தனது பொறுப்பை ஏற்று கொண்டு கட்டளைகளை வழங்கினார். தனது குதிரையில் ஏற்றப்பட்ட அவர் பைசாந்தியப் படை அணிகளினுள்ளே ஆழமாக ஊடுருவினார். அவர் தனது குதிரையைத் தூண்டி குதிக்கும்போது, அவர் கர்ஜித்தார்: "எவ்வளவு அற்புதம், சொர்க்கம் நெருங்கி வருவதால்! அதன் பானம் எவ்வளவு இனிமையானது மற்றும் குளிர்ச்சியானது! பைசாந்தியர்களுக்கான தண்டனை வெகுதொலைவில் இல்லை!". ஜாஃபர் தனது இரு கைகளும் துண்டிக்கப்படும் வரை போராடினார்,[சான்று தேவை] ஆனால் அவர் இறுதியில் கொல்லப்பட்டார். "ஒரு ரோமானியன் அவரைத் தாக்கி இரண்டு பகுதிகளாக வெட்டினான். திராட்சைக் கொடியின் மீது ஒரு பாதி பகுதி விழுந்தது, தோராயமாக முப்பது காயங்கள் அதில் காணப்பட்டன. ஜாஃபரின் உடல் அவரது தோள்களுக்கு இடையில் எழுபத்திரண்டு தழும்புகள் இருந்தது, அங்கு அவர் ஒன்று வாளால் தாக்கப்பட்டார் அல்லது ஈட்டியால் குத்தப்பட்டார். " [23]

பின்விளைவு[தொகு]

செய்தி முஹம்மது அவர்களை அடைந்ததும், அவர் அழுது ஜாஃபரின் ஆன்மாவுக்காக இறைவனிடம் முறையிட்டார்.  பின்னர் ஜிப்ரில் (கேப்ரியல்) தேவதை அவரை ஆறுதல்படுத்த வந்ததாக அவர் கூறினார்: "ஜாஃபர் ஒரு தைரியமான மற்றும் நபிம்பிக்கையான படைவீரர். இறைவன் அவருக்கு முடிவில்லா வாழ்க்கையை கொடுத்திருக்கிறான், போரில் துண்டிக்கப்பட்ட அவரது கைகளுக்குப் பதிலாக, இறைவன் அவருக்கு இரட்டை சிறகுகள் கொடுத்திருக்கின்றான். " அதன்பின்னர் ஜாஃபர் புனைபெயர் Dhul-Janāḥīn ஆனது (அரபு மொழி: ذُو ٱلْجَنَاحِيْن‎ , "சிறகுகளுள்ளவர்").[24]

ஜாஃபரின் கைம்பெண் அஸ்மா நினைவு கூர்ந்தார்: "இறை தூதர் என்னிடம் வந்து, 'ஜாஃபரின் குழந்தைகள் எங்கே?' நான் அவர்களை அவரிடம் கொண்டு சென்றேன், அவர் அவர்களைத் தழுவி முகர்ந்து, பின்னர் அவரது கண்கள் நனைந்து, அவர் அழுதார். 'இறைதூதரே,' நான் கேட்டேன், 'நீங்கள் ஜாஃபரைப் பற்றி ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவர் இன்று கொல்லப்பட்டார்.' நான் எழுந்து நின்று கத்தினேன், பெண்கள் என்னிடம் வந்தார்கள். நபிகள், 'அஸ்மா, தகாத சொற்களைப் பேசாதீர்கள் அல்லது உங்கள் நெஞ்சில் அடித்துக்கொள்ளாதீர்கள்!' அவரது மகன் அப்துல்லா நினைவு கூர்ந்தார்: "அவர், 'அஸ்மா, நீங்கள் மகிழ்ச்சியடைய மாட்டீர்களா? உண்மையில், மிக உயர்ந்த அந்த இறைவன் ஜாஃபருக்கு சொர்க்கத்தில் அவர்களுடன் பறக்கும்படி இரண்டு சிறகுகளை வழங்கியுள்ளான்! '" பின்னர் முஹம்மது அவர்கள் தனது மகள் பாத்திமாவிடம், "ஜாஃபரின் குடும்பத்திற்கு உணவு தயார் செய்யுங்கள், ஏனென்றால் அவர்கள் இன்று சில சிந்தனைகளில் ஆழ்ந்து இருப்பார்கள்." [25]

வழித்தோன்றல்கள்[தொகு]

 • அப்துல்லா சயனாப் பின்த் அலியை மணந்தார்; கர்பலா போரில் அவர்களின் மகன்கள் கொல்லப்பட்டனர்
 • முஹம்மது
 • அவ்ன்
 • யஹ்யா இப்னு உமர் - ஒரு கிளர்ச்சியை வழிநடத்திய ஒரு வழித்தோன்றல்
 • அப்தல்லா இப்னு முஆவியா - குஃபாவில் ஷியாக்கள் இமாமாக அமைந்து ஒரு கிளர்ச்சியை வழிநடத்திய ஒருவழித்தோன்றல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Jafar al-Tayyar, Al-Islam.org
 2. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat Al-Kabir vol. 1. Translated by Haq, S. M. (1967). Ibn Sa'd's Kitab Al-Tabaqat Al-Kabir, Volume I, Parts I & II, pp. 135-136. Delhi: Kitab Bhavan.
 3. Muhammad ibn Saad, Kitab al-Tabaqat Al-Kabir vol. 8. Translated by Bewley, A. (1995). The Women of Madina, p. 156. London: Ta-Ha Publishers.
 4. Muhammad ibn Ishaq, Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad, p. 114. Oxford: Oxford University Press.
 5. Ibn Ishaq/Guillaume, p. 116.
 6. 6.0 6.1 Ibn Saad/Bewley vol. 8 p. 196. London: Ta-Ha Publishers.
 7. Ibn Ishaq/Guillaume p. 146.
 8. Ibn Ishaq/Guillaume pp. 148, 150.
 9. Ibn Ishaq/Guillaume pp. 150-151.
 10. 10.0 10.1 Ibn Ishaq/Guillaume p. 151.
 11. Ibn Ishaq/Guillaume pp. 151-152.
 12. 12.0 12.1 Ibn Ishaq/Guillaume p. 152.
 13. Ibn Ishaq/Guillaume pp. 152-153.
 14. "Khotan". Archnet.org. 2004-12-03. Archived from the original on 13 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
 15. Arnold, T. W. (1913), The Preaching of Islam: A History of the Propagation of the Muslim Faith (2 ed.), London: Constable & Company Ltd., p. 296, f 3
 16. Arnold, p. 296.
 17. Ibn Ishaq/Guillaume p. 526.
 18. Waqidi, Kitab al-Maghazi. Translated by Faizer, R., Ismail, A., & Tayob, A. (2011). The Life of Muhammad p. 336. Oxford: Routledge.
 19. Bukhari 5:57:57.
 20. Ibn Ishaq/Guillaume p. 532.
 21. Waqidi/Faizer p. 372.
 22. Ibn Ishaq/Guillaume p. 534.
 23. Waqidi/Faizer p. 374.
 24. Ibn Ishaq/Guillaume p. 234.
 25. Waqidi/Faizer p. 377.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஃபர்_இப்னு_அபி_தாலிப்&oldid=3448473" இலிருந்து மீள்விக்கப்பட்டது