ஜஸ்வான் இராச்சியம்
![]() | இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
Warning: Value not specified for "common_name" | |||||
ஜஸ்வான் இராச்சியம் | |||||
| |||||
![]() | |||||
தலைநகரம் | இராஜ்புரா | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்ட ஆண்டு | கிபி 1170 | |||
• | சீக்கியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. | 1849 | |||
தற்காலத்தில் அங்கம் | உனா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
ஜஸ்வான் இராச்சியம் (Jaswan), இந்தியாவின் தற்கால இமாச்சலப் பிரதேசத்தின் உனா (இமாச்சலப் பிரதேசம்)|உனா]] பகுதிகளைக் கொண்டது. இதனை ஜஸ்வால் இராஜபுத்திர குலத்தினர் ஆட்சி செய்தனர். [1]இதன் தலைநகரம் இராஜ்புரா ஆகும்.
அமைவிடம்
[தொகு]சிவாலிக் மலையில் இந்த இராச்சியம் 64 கிலோ மீட்டர் நீளமும்; 8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் தெற்கில் பஞ்சாப் சமவெளியும், மேற்கில் சிவாலிக் மலையும், வடக்கில் சிபா இராச்சியம் மற்றும் தாதார்பூர் இராச்சியம் மற்றும் கிழக்கில் காங்கரா இராச்சியம், பிலாஸ்பூர் சமஸ்தானம் எல்லைகளாகக் கொண்டது.
வரலாறு
[தொகு]
காங்கரா இராச்சியத்தின் அரச குலத்தினரின் இளைய பிரிவினர் 1170ல் ஜச்வான் இராச்சியத்தை நிறுவினர். 1809ல் ஜஸ்வான் இராச்சியம் சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசுக்கு]] திறை செலுத்தும் ஒரு சிற்றரசு ஆனது. 18815ல் ஜஸ்வான் இராச்சியத்தை சீக்கியப் பேரரசில் இணைக்கப்பட்டு, ஜமீன்தார் நிலைக்கு தள்ளப்பட்டது. இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் (1848-1849) முடிவில் ஜஸ்வான் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.[2] ஜஸ்வான் மன்னர் உமையத் மற்றும் அவரது மகன் ஜெய் சிங்கை அல்மோராவில் வீட்டுச் சிறை வைத்தனர். 1854ல் மன்னர் மறைந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jerath, Ashok (1998). Dogra Legends of Art and Culture. Indus Publishing Company. pp. 20–22. ISBN 978-8173870828. Retrieved 13 September 2019.
- ↑ Archer, William G. (1973). "Painting in Jaswan". Indian Paintings from the Punjab Hills: A Survey and History of Pahari Miniature Painting. Vol. 1: Text. Sotheby Parke Bernet (London and New York) / Oxford University Press (Delhi). pp. 221–223.
- ↑ "History of Una". National Informatics Centre. Retrieved 13 September 2019.