ஜஸ்வந்த் தடா
ஜஸ்வந்த் தடா (Jaswant Thada) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள ஒரு கல்லறை ஆகும். இது சோத்பூர் மாநிலத்தின் மகாராஜா சர்தார் சிங் என்பவரால் 1899 ஆம் ஆண்டு அவரது தந்தை மகாராஜா இரண்டாம் ஜஸ்வந்த் சிங் நினைவாக கட்டப்பட்டது.[1] மேலும் இது மார்வாரின் அரச ராஜ்புத்திர குடும்பத்திற்கு தகனம் செய்யும் இடமாக செயல்பட்டது. [2]
மக்ரானா பளிங்குக் கற்களால் கல்லறை கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் மிகவும் மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருப்பதால், சூரிய ஒளியில் அவை ஒரு சூடான பிரகாசத்தை வெளியிடுகின்றன.
கல்லறையின் மைதானம் செதுக்கப்பட்ட ஒரு கூடாரம், ஒரு அடுக்கு தோட்டம் மற்றும் ஒரு சிறிய ஏரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைதானத்தில் மேலும் மூன்று கல்லறைகள் உள்ளன. மகாராஜா ஜஸ்வந்த் சிங்கின் கல்லறை . சோத்பூர் ஆட்சியாளர்களின் அரிய உருவப்படங்களும் ஜஸ்வந்த் தடாவில் காணப்படுகின்றன. [3]
புகைப்படங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Jain, Ajay (2013). Jodhpur, Rajasthan, India. Kunzum. p. 11.
- ↑ Sinha, Juhi (2007). Beyond the Dunes: Journeys in Rajasthan. Penguin. p. 72.
- ↑ Subodh Kapoor (2002). The Indian Encyclopaedia: Indo-Pak War-Kamla Karri. p. 3755.
வெளி இணைப்புகள்
[தொகு]Jaswant Thada – A beautiful memorial in Jodhour