ஜஸ்லீன் தாமிஜா
ஜஸ்லீன் தமிஜா (1933 - 4 மார்ச் 2023) ஓர் இந்திய துணிக் கலை வரலாற்றாசிரியர், கைவினை நிபுணர், ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர் ஆவார்.[1] தில்லியில் வாழும் இவர், கைத்தறி மற்றும் கைவினைத் தொழில், குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைகளின் வரலாறு குறித்த முன்னோடி ஆராய்ச்சிக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.[2][3] இவர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் வாழும் கலாச்சார மரபுகள் துறையின் பேராசிரியராக இருந்தார்.[4] தனது பணிக்காலத்தில், இந்தியாவின் புனித ஜவுளி (2014) நூல் உட்பட துணி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.[2][5]
பின்னணி
[தொகு]தமிஜா 1933 ஆம் ஆண்டு பிறந்தார்.[6] வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள அபோட்டாபாத்தில் வளர்ந்தார். பின்பு 1940 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தில்லிக்குக் குடிபெயர்ந்தது. அங்கு அவர்கள் தில்லியின் சிவில் லைன்ஸின் கைபர் பாஸ் பகுதியில் வசித்து வந்தனர். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் பட்டம் பெற்றார்.[6][7]
தமீஜா 2023 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் இறந்தார்.[8]
தொழில் வாழ்க்கை
[தொகு]1954 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தில் கலாச்சாரம் மற்றும் கைவினை மறுமலர்ச்சியாளர் கமலாதேவி சட்டோபாத்யாயுடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய தமிஜா, கைவினை மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பணியாற்றத் தொடங்கினார்.[9][10] 1960ஆம் ஆண்டுகளில், இவர் இந்தியக் கைவினைப்பொருட்கள் வாரியத்தில் பணிபுரிந்தார். பின்னர் கிராமப்புறங்களில் நேரடியாகக் கைவினைக் கலைஞர்களுடன் பணியாற்றத் தொடங்கினார். இது காலப்போக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பால்கன் நாடுகளில் பெண்களுக்கான சுய உதவித் திட்டங்களை உருவாக்க ஐ.நா சபையுடன் இணைந்து பணியாற்ற வழிவகுத்தது.[1]
பல ஆண்டுகளாக, இவர் பல ஜவுளி மற்றும் கைவினைக் கண்காட்சிகளைத் தொகுத்து வழங்கினார்.[10] கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளி பற்றிய பல புத்தகங்களைத் தவிர, இவர் ஜாய் ஆஃப் வெஜிடேரியன் குக்கிங் (2000) உட்பட இரண்டு சமையல் புத்தகங்களையும் எழுதினார். 2007 ஆம் ஆண்டில், கமலாதேவி சட்டோபாத்யாயின் வாழ்க்கை வரலாற்றையும், நவீன இந்தியாவில் கலை மற்றும் கைவினைகளின் மறுமலர்ச்சியில் தனது பங்கையும் வெளியிட்டார்.[11]
இவர் புது தில்லியில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியரக இருந்தார். அங்கு இந்திய ஜவுளி மற்றும் உடைகளின் வரலாற்றைக் கற்பித்தார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Labonita Ghosh (29 October 2001). "Jasleen Dhamija looks beyond embroidery at the people responsible for it". India Today. Retrieved 2014-10-09.
- 1 2 Sangeeta Barooah Pisharoty (23 July 2014). "Drapes and divinity - The Hindu". தி இந்து. Retrieved 2014-10-09.
- ↑ "Jasleen Dhamija" (PDF). Sutra Textile Studies. Archived from the original (PDF) on 14 October 2014. Retrieved 2014-10-09.
- ↑ Damayanti Datta (16 January 2009). "The interpretation of yarns". India Today. Retrieved 2014-10-09.
- ↑ Dhara Vora (1 Sep 2014). "Weaving holy traditions". MiD DAY. Retrieved 2014-10-09.
- 1 2 "India in the 1940s: The way we were". Hindustan Times. 10 August 2013. Archived from the original on 11 August 2013. Retrieved 2014-10-09.
- ↑ "Of people and places: Jasleen Dhamija". Indian-seminar. 2002. Retrieved 2014-10-09.
- ↑ "Remembering Jasleen Dhamija, India's custodian of crafts (1933–2023)". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-16. Retrieved 2023-09-26.
- ↑ Janani Sampath (3 November 2012). "South has preserved crafts successfully so far". The New Indian Express. Archived from the original on 26 October 2014. Retrieved 2014-10-09.
- 1 2 "Dhamija, Jasleen". craftrevival.org. Archived from the original on 14 February 2014. Retrieved 2014-10-09.
- ↑ "Paperback Pickings". The Telegraph - Calcutta. 16 March 2007. Archived from the original on 9 October 2014. Retrieved 2014-10-09.
- ↑ "Jasleen Dhamija" (PDF). Sutra Textile Studies. Archived from the original (PDF) on 14 October 2014. Retrieved 2014-10-09.