ஜஸ்பூர்நகர்

ஆள்கூறுகள்: 22°54′N 84°09′E / 22.90°N 84.15°E / 22.90; 84.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஷ்பூர் நகர்
जशपुर नगर
நகரம்
ஜஷ்பூர் நகர் is located in சத்தீசுகர்
ஜஷ்பூர் நகர்
ஜஷ்பூர் நகர்
இந்தியாவின் சததீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் நகரத்தின் அமைவிடம்
ஜஷ்பூர் நகர் is located in இந்தியா
ஜஷ்பூர் நகர்
ஜஷ்பூர் நகர்
ஜஷ்பூர் நகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°54′N 84°09′E / 22.90°N 84.15°E / 22.90; 84.15
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்ஜஷ்பூர்
ஏற்றம்753 m (2,470 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்28,301
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்496331
தொலைபேசி குறியீடு7763
வாகனப் பதிவுCG-14

ஜஷ்பூர் நகர் (Jashpur Nagar), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வடகிழக்கில் அமைந்த ஜஷ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சங்கு ஆற்றின் கரையில் உள்ளது. முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், இந்நகரம் ஜஷ்பூர் சமஸ்தானத்த்தின் தலைநகராக விளங்கியது.

சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தில் அமைந்த ஜஷ்பூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 753 மீட்டர் உயரத்தில் உள்ளது. மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வடகிழக்கே 463 கிலோ மீட்டர் தொலைவில் ஜஷ்பூர் நகரம் உள்ளது. இந்நகரம் ஜார்கண்ட் மாநில எல்லையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 19 வார்டுகளும், 6,128 வீடுகளும் கொண்ட ஜஷ்பூர் நகர் மக்கள் தொகை 28,301 ஆகும். அதில் 14,338 ஆண்கள் மற்றும் 13,963 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,214 மற்றும் 11,169 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.27%, இசுலாமியர் 8.38%, சமணர்கள் 1.08%, கிறித்தவர்கள் 12.83%, மற்றும் பிறர் 1.46% ஆகவுள்ளனர்.[1]

ஜஷ்பூரில் பாயும் ஆறுகள்

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Jashpur Nagar (1981–2010, extremes 1965–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.6
(87.1)
37.6
(99.7)
38.6
(101.5)
41.2
(106.2)
46.4
(115.5)
47.2
(117)
41.0
(105.8)
35.6
(96.1)
34.2
(93.6)
34.5
(94.1)
31.6
(88.9)
34.4
(93.9)
47.2
(117)
உயர் சராசரி °C (°F) 24.2
(75.6)
26.6
(79.9)
31.4
(88.5)
35.2
(95.4)
36.6
(97.9)
33.0
(91.4)
29.2
(84.6)
28.6
(83.5)
28.9
(84)
29.2
(84.6)
27.1
(80.8)
25.1
(77.2)
29.6
(85.3)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
10.7
(51.3)
14.9
(58.8)
19.0
(66.2)
22.3
(72.1)
22.5
(72.5)
21.9
(71.4)
21.6
(70.9)
20.7
(69.3)
16.9
(62.4)
11.8
(53.2)
7.7
(45.9)
16.5
(61.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.0
(33.8)
0.7
(33.3)
5.0
(41)
10.5
(50.9)
14.1
(57.4)
16.2
(61.2)
13.7
(56.7)
13.3
(55.9)
13.7
(56.7)
9.5
(49.1)
4.7
(40.5)
1.3
(34.3)
0.7
(33.3)
மழைப்பொழிவுmm (inches) 26.6
(1.047)
23.1
(0.909)
24.4
(0.961)
19.4
(0.764)
46.2
(1.819)
281.4
(11.079)
468.3
(18.437)
364.4
(14.346)
260.1
(10.24)
77.2
(3.039)
18.3
(0.72)
13.3
(0.524)
1,622.7
(63.886)
ஈரப்பதம் 55 47 35 32 40 65 82 82 81 69 60 56 58
சராசரி மழை நாட்கள் 2.0 2.0 2.1 1.7 4.0 11.3 20.1 18.7 12.6 4.6 1.1 0.9 81.1
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்பூர்நகர்&oldid=3514856" இருந்து மீள்விக்கப்பட்டது