உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸ்பிந்தர் நருலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஸ்பிந்தர் நருலா (Jaspinder Narula பிறப்பு: நவம்பர் 14,1970) பாரம்பரிய மற்றும் சுஃபி இசை இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இந்தி, பஞ்சாபி சினிமாவில் பணியாற்றியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார். 1998-ஆம் ஆண்டு வெளியான பியார் தோ ஹோனா ஹி தா திரைப்படத்தில் ரெமோ பெர்னாண்டசுடன் இணைந்து பாடிய "பியார் தோ ஹானா ஹி தா" என்ற பாடலுக்குப் பிறகு இவர் புகழ் பெற்றார். இதற்காக 1999-ஆம் ஆண்டு சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். மிஷன் காஷ்மீர், மொஹப்பத்தேன், பிர் பி தில் ஹை இந்துஸ்தானி மற்றும் பண்டி அவுர் பாப்லி ஆகியவை இவர் பாடிய பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.[1] இவர் சூஃபி இசை, குர்பானி மற்றும் பிற சீக்கிய மத இசைகளைப் பாடுகிறார்.[2] இவர் முடாசிர் அலியுடன் இணைந்து "மௌலா அலி அலி" என்ற இந்தி இசை நிகழ்படத்தில் பாடியுள்ளார்.[3] 2008 ஆம் ஆண்டில், என்டிடிவி இமேஜின் பாடும் மெய்நிகழ்ச்சித் தொடரான தூம் மசா தே (2008)-இல் இந்தியாவின் சிறந்த நேரடிக் கலைஞர் பட்டத்தை வென்றார்.[4][5]

சனவரி 2025-இல், நருலாவுக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[6][7]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]
Jaspiner Narula at Jashn-e-Rekhta 2019
ஜஷ்ன்-இ-ரேக்தா 2019 இல் ஜஸ்பிந்தர் நருலா

ஜஸ்பிந்தர் நருலா ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கேசர் சிங் நருலா 1950-களில் பரவலாக அறியபட்ட இசையமைப்பாளராக இருந்தார். இவரது வழிகாட்டுதலின் கீழ் இசையில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பின்னர் இவர் ராம்பூர் சகஸ்வான் கரானாவின் உஸ்தாத் குலாம் சாதிக் கானின் கீழ் தனது இசைப் படிப்பைத் தொடர்ந்து பாரம்பரிய இசை அறிவினை மேலும் வளர்த்துக் கொண்டார். நருலா தனது பள்ளிப்படிப்பை புதுதில்லியில் உள்ள இந்தியா கேட், குருகர்கசன் பொதுப் பள்ளியில் முடித்தார், மேலும் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில், இசைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தார், அங்கு 12 ஆம் வகுப்பில் இசை ஒரு பாடமாக இல்லாததால் இவர் ஒரு சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் முனைவர் பட்டம் பெற்றார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் மும்பையில் வசித்து வருகிறார், மேலும் தில்லியைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் ஒருவரை மணந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "All's not over yet". தி இந்து. 20 December 2010 இம் மூலத்தில் இருந்து 9 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140709150648/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2010122050900800.htm&date=2010/12/20/&prd=mp&.
  2. "Spirited and soulful: The concert by Wadali Brothers and Jaspinder Narula saw..". தி இந்து. 6 November 2009 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125143537/http://www.hindu.com/fr/2009/11/06/stories/2009110650130200.htm.
  3. "Latest Hindi Song Music Video – 'Maula Ali Ali' Sung By Jaspinder Narula And Mudasir Ali". https://timesofindia.indiatimes.com/videos/entertainment/music/hindi/watch-latest-hindi-song-music-video-maula-ali-ali-sung-by-jaspinder-narula-and-mudasir-ali/videoshow/84499299.cms.
  4. "Doctor of notes!: Jaspinder Narula on her return to the limelight". தி இந்து. 18 February 2008 இம் மூலத்தில் இருந்து 25 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125063046/http://www.hindu.com/mp/2008/02/18/stories/2008021850150100.htm.
  5. 1 2 "Jaspinder Narula on winning Dhoom Macha De". Rediff.com. 12 May 2008."Jaspinder Narula on winning Dhoom Macha De". Rediff.com. 12 May 2008.
  6. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  7. "Padma Awards 2025 announced". pib.gov.in.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்பிந்தர்_நருலா&oldid=4590761" இலிருந்து மீள்விக்கப்பட்டது