ஜவாய் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீரேந்துப் பகுதி நாடுகள் இந்தியா

ஜவாய் ஆறானது ராஜஸ்தான் மாநிலத்தின்  உதய்பூர் மாவட்டத்திலன் ஆரவல்லி மலை தொடர்களில் உருவாகும் ஒர் ஆறாகும். இது லூனி ஆற்றின் கிளை ஆறாகும்.

சுக்ரி ஆறானது இதன் முக்கிய கிளை ஆறாகும். ஜலோர் மாவட்டத்தில் உள்ள சாயலா  என்னும் ஊரில் கஹரி என்னும் ஆற்றில் கலக்கிறது. பின்னர் வட மேற்காக 96 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உதய்பூர், பாலி மற்றும் ஜலோர் மாவட்டங்களில் 2976 சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவை வளப்படுத்துகிறது.

மேற்கு ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் உள்ள சுமேர்பூரில் உள்ள ஜவாய் அணை இந்த ஆற்றின் மீதே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்கு ராஜஸ்தானில் உள்ள மிக பெரிய அணை ஆகும். சுமேர்பூர் மற்றும் ஷியோகஞ் ஆகிய இரட்டை நகரங்கள் இந்த ஆற்றின் கரைகளிலேயே அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவாய்_நதி&oldid=2757857" இருந்து மீள்விக்கப்பட்டது