ஜவாய் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவாய்
அமைவு
Countryஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஉதய்பூர் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
இலூனி ஆறு

ஜவாய் (Jawai) என்பது உதய்பூர் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் ஒரு ஆறு ஆகும். இது இலூனி ஆற்றின் கிளை நதியாகவும் திகழ்கிறது.

சுக்ரி ஆறானது இதன் முக்கியத் துணை ஆறாகும். இந்த ஆறானது ஜலோர் மாவட்டம், சயாலா அருகே காரி ஆற்றில் இணைவதற்கு முன், இந்த ஆறு வடமேற்கு திசையில் சுமார் 96 கிலோமீட்டர் (60 மைல்கள்) தொலைவு வரை பாய்கிறது. அதன் பின்னர் சுக்ரி நதி என்று அழைக்கப்படுகிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி உதய்பூர், பாலி மற்றும் ஜலோர் மாவட்டங்களில் 2976 சதுர கிலோமீட்டர் (1149 சதுர மைல்கள்) ஆகும்.

மேற்கு ராஜஸ்தானின் மிகப்பெரிய அணையான ஜவாய் அணை, பாலி மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் அருகே இந்த ஆற்றில் மட்டுமே அமைந்துள்ளது. சிரோஹி மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் மற்றும் ஷியோகஞ்ச் ஆகிய இரட்டை நகரங்கள் ஜவாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவாய்_ஆறு&oldid=3710788" இலிருந்து மீள்விக்கப்பட்டது