உள்ளடக்கத்துக்குச் செல்

ஜவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜவான் (Jawan) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய இந்தி மொழி விழிப்புணர்வு அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதன் வழியாக அட்லீ முதன் முதலில் இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை அட்லி இணைந்து எழுதி, இயக்கியுள்ளார். இதை கௌரி கான் தன் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் தயாரித்துள்ளார்.[1][2] இதில் சாருக் கான் இரட்டை வேடங்களில் நடித்துளார். அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோண், பிரியாமணி, சான்யா மல்கோத்ரா , சுனில் குரோவர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில், ஒரு சிறை வார்டன் சட்டத்தைக் கையில் எடுத்து கைதிகளைச் உடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவில் நடக்கும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் செயல்களில் ஈடுபடுகிறார்.

இப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 2021 செப்டம்பரில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு புனே, மும்பை, கோரேகாவ், ஹைதராபாத், சென்னை, இராசத்தான் , சத்திரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் பின்னணி இசை மற்றும் திரைப்படப் பாடல் இசை ஆகியவற்றை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார். ஒளிப்பதிவை ஜி. கே. விஷ்ணுவும், படத்தொகுப்பை ரூபனும் மேற்கொண்டனர். படத்தின் சில பகுதிகள் தமிழ் பதிப்பிற்காக ஒரே நேரத்தில் மீண்டும் படமாக்கப்பட்டன. குறிப்பாக " ஜிந்தா பந்தா " (தமிழில் "வந்த இடம்") பாடலில் சீருக் கானின் தோற்றம், சேதுபதியின் பகுதிகள் மற்றும் யோகி பாபு இடம்பெறும் காட்சிகள் மீண்டும் படமாக்கபட்டன.[3]

ஜவான் திரைப்படம் 2023 செப்டம்பர் 7 அன்று கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, வழக்கமான திரையரங்கு வடிவங்களில் மட்டுமன்றி, ஐமேக்சு மற்றும் 4டிஎக்ஸ் வடிவங்களில் வெளியானது. நடிகர்களின் நடிப்பு, இயக்கம், சண்டைக் காட்சிகள், பாடல்கள் , ஒளிப்பதிவு ஆகியவை விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4][5] இப்படம் திரையரங்க வசூலில் 1,100 கோடி (ஐஅ$130 மில்லியன்) மேல் ஈட்டி, 2023 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.[6] மார்ச்சு 2026 நிலவரப்படி, இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த எட்டாவது இந்தியத் திரைப்படமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இது 69வது பிலிம்பேர் விருதுகளில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்றது.[7] 71 வது தேசிய திரைப்பட விருதுகளில், இப்படம் சிறந்த முன்னணி நடிகர் (சாரு கான்) மற்றும் சிறந்த பின்னணிப் பாடகி ( ஷில்பா ராவ் " சலேயா " பாடலுக்காக) என இரண்டு விருதுகளைப் பெற்றது.[8]

எதிர்காலம்

[தொகு]

இப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு இரண்டாம் பாகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.[9][10] இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் தொடர்ச்சி உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து சாரு கான் உறுதிபடத் தெரிவித்தார்.[11] பிங்க்வில்லாவுக்கு அளித்த செவ்வியில், அட்லீ இப்படத்திற்கு நிச்சயமாக இரண்டாம் பாகமாக ஒரு படம் இருக்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் விக்ரம் ரத்தோர் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு ஸ்பின்-ஆஃப் திரைப்படத்தை உருவாக்கும் திட்டங்கள் திட்டங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.[12][13] பின்னர் 2023 செப்டம்பரில், அட்லீ இப்படத்தின் தொடர்ச்சிக்கான திரைக்கதை எழுதும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.[14]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shah Rukh Khan, Atlee's film titled 'Jawan'". தி இந்து. 3 June 2022 இம் மூலத்தில் இருந்து 7 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230307010605/https://www.thehindu.com/entertainment/movies/shah-rukh-khan-atlees-film-titled-jawan/article65490645.ece.
  2. "Is Jawan a ‘propaganda film’? It is for…". Hindustan Times. https://www.hindustantimes.com/entertainment/bollywood/is-jawan-a-propaganda-film-it-is-for-brand-srk-101695368613618-amp.html.
  3. "Jawan: Shah Rukh Khan Film's Hindi and Tamil Versions Are Different In This Aspect!". Times Now. 11 September 2023. Archived from the original on 12 September 2023. Retrieved 11 September 2023.
  4. "Jawan release pushed to September, Shah Rukh Khan says 'takes time and patience to make something worthy'". Hindustan Times. 6 May 2023. Archived from the original on 6 May 2023. Retrieved 6 May 2023.
  5. "Jawan: Deepika Padukone reacts after Rakul Preet Singh calls her cameo in Shah Rukh Khan starrer 'impactful'". Pinkvilla. 8 September 2023. Archived from the original on 9 September 2023. Retrieved 12 September 2023. The film is earning critical acclaim for its stellar performances, gripping dialogues, mass appeal, and powerful musical score.
  6. "From Jawan's Rs. 600+ crores to 21 films earning in Rs. 0-1 crore range, here are the MOST DEFINITIVE box office RECORDS of 2023". Bollywood Hungama (in ஆங்கிலம்). 8 January 2024. Archived from the original on 10 January 2024. Retrieved 10 January 2024.
  7. "Nominations for the 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Full list out". Filmfare. 15 January 2024 இம் மூலத்தில் இருந்து 15 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240115193555/https://www.filmfare.com/news/bollywood/nominations-for-the-69th-hyundai-filmfare-awards-2024-with-gujarat-tourism-full-list-out-63822.html.
  8. "71st National Film Awards: Shah Rukh Khan and Rani Mukerji receive their first ever National Award after over 3 decades in the industry". The Indian Express (in ஆங்கிலம்). 2025-08-01. Retrieved 2025-08-01.
  9. "Shah Rukh Khan and Atlee to return with Jawan 2? Details inside". Pinkvilla. 7 September 2023. Archived from the original on 12 September 2023. Retrieved 15 September 2023.
  10. "Jawan 2 On Cards? Shah Rukh Khan Film's End Credits Hints As Much". Times Now. 7 September 2023. Retrieved 7 September 2023.
  11. "Shah Rukh Khan teases second instalment of Jawan, responds to X user questioning number of female actors in Atlee's film". Hindustan Times. 10 September 2023. Archived from the original on 13 September 2023. Retrieved 15 September 2023.
  12. "Shah Rukh Khan's 'Jawan' now enters prestigious Rs 800-cr-club, director Atlee teases fans with possibility of a Vikram Rathore spinoff". The Economic Times. 18 September 2023. Archived from the original on 18 September 2023. Retrieved 18 September 2023.
  13. "EXCLUSIVE: Atlee confirms plans for Jawan 2 with Shah Rukh Khan; Wants to make Vikram Rathore spin off too". Pinkvilla. 16 September 2023. Archived from the original on 18 September 2023. Retrieved 16 September 2023.
  14. "Exclusive: Here's what you need to know about Atlee's Jawan 2". Filmfare. Archived from the original on 15 September 2023. Retrieved 15 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவான்&oldid=4588284" இலிருந்து மீள்விக்கப்பட்டது