ஜல்-ஜீரா
ஜல்-ஜீரா, அல்லது ஜல்ஜிரா, ஒரு இந்திய பானமாகும். இது ஜல்-ஜீரா தூள் எனப்படும் மசாலா கலவையுடன் சுவைக்கப்படுகிறது. இந்தியில், "ஜல்" என்றால் தண்ணீர் மற்றும் "ஜீரா" என்றால் சீரகம். இந்த பானத்தில் முக்கியமாக எலுமிச்சை மற்றும் ஜல்ஜிரா தூள் ஆகியவை கலந்துள்ளன. இது இந்தியாவில் பிரபலமான கோடைக்கால பானமாகும். இது நாக்கின் சுவை மொட்டுகளை தூண்டுவதால், சில சமயங்களில் இது பசியை உண்டாக்கக்கூடும்.
ஜல்ஜிரா பொடி பொதுவாக சீரகம், இஞ்சி, புதினா இலை, கருப்பு உப்பு, சில பழ தூள் (பொதுவாக மாம்பழம் அல்லது சில வகையான சிட்ரஸ் சுவை) மற்றும் மிளகாய் அல்லது காரமான மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாறு மற்றும் கலாச்சாரம்
[தொகு]ஜல்ஜீரா கங்கை நதிக்கரையில் . ஒரு காலத்தில், தூள் கல் பாளங்களில் அரைக்கப்பட்டு, மண் பானைகளில் சேமிக்கப்பட்டது. [1]
சீரகம் செரிமானத்திற்கு உதவும் ஒரு மருத்துவப் பொருளாகும். புதினா குளிர்ச்யைக் கொண்டுள்ளது. கருப்பு உப்பு அல்லது கல் உப்பு செரிமானத்திற்கு உதவுகிறது.
வடஇந்திய பகுதிகளின் வெப்பநிலைக்கு எதிராக குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பதால் ஜல்ஜீரா வட இந்தியாவில் பிரபலமானது..
மேலும் பார்க்கவும்
[தொகு]- ஜீரா தண்ணீர்
- இந்திய பானங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ doctor.ndtv.com. "Jaljeera: Health Benefits Of Jaljeera That Will Amaze You". Doctor.ndtv.com. Retrieved 2021-02-15.