ஜலால்கர் கோட்டை
| ஜலால்கர் கோட்டை | |
|---|---|
| பொதுவான தகவல்கள் | |
| நிலைமை | பாழடைந்து உள்ளது (மறுசீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது) |
| வகை | கோட்டை |
| நகரம் | பூர்ணியா |
| நாடு | இந்தியா |
| புதுப்பித்தல் | 2012 |
| உரிமையாளர் | இந்திய அரசு |
ஜலால்கர் கோட்டை (Jalalgarh Fort) என்பது இந்தியாவின் பீகாரில் உள்ள பூர்ணியா நகருக்கு வடக்கே 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாழடைந்த கோட்டையாகும். இந்தக் கோட்டை 1722-இல் பூர்ணியாவின் ஆட்சியாளர் சைஃப் கான் என்பவரால் கட்டப்பட்டது.[1][2][3]
அமைப்பு
[தொகு]ஒரு பெரிய நாற்கர அமைப்புடன் கூடிய இந்தக் கோட்டை உயரமான சுவர்களைக் கொண்டுள்ளது. இது நேபாள படையெடுப்பிலிருந்து நகரைப் பாதுகாக்க உதவியது.ref name="Bihar directory2">"Bihar directory". bih.nic.in. Archived from the original on 25 May 2012. Retrieved 26 December 2012.</ref> இந்த கோட்டை இசுலாமிய கட்டிடக்கலையின் அழகின் உருவகமாகும்.[4]
மறுசீரமைப்பு
[தொகு]ஜனவரி 2012 இல், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் அரசு கோட்டையை மீட்டெடுத்து பழுதுபார்க்கும் என்று அறிவித்தார். இந்த மறுசீரமைப்பு பணியை செய்யுமாறு அவர் பூர்ணியா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oriental Geographer. Bangladesh Geographical Society. 1964. p. 121. Retrieved 27 December 2012.
- ↑ "Bihar: Jalalgarh fort to be restored". Zee News. http://zeenews.india.com/news/bihar/bihar-jalalgarh-fort-to-be-restored_751884.html. பார்த்த நாள்: 26 December 2012.
- ↑ "Jalalgarh Fort, Purnia". Archived from the original on 17 January 2013. Retrieved 26 December 2012.
- ↑ "Nitish visit draws tourists to forgotten fort". The Telegraph (Calcutta) இம் மூலத்தில் இருந்து February 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203134307/http://www.telegraphindia.com/1120112/jsp/bihar/story_14995407.jsp%23.UNte36wUDcc. பார்த்த நாள்: 26 December 2012.
- ↑ "Bihar: Jalalgarh fort to be restored". Zee News. http://zeenews.india.com/news/bihar/bihar-jalalgarh-fort-to-be-restored_751884.html. பார்த்த நாள்: 26 December 2012.