ஜலந்தர்-ஜம்மு இருப்புப் பாதை
Appearance
ஜலந்தர்-ஜம்மு இருப்புப் பாதை | |
---|---|
ஜலந்தர்-ஜம்மு இருப்புப் பாதையில் அமைந்த சம்பா தொடருந்து நிலையம் | |
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்தில் |
உரிமையாளர் | இந்திய இரயில்வே |
வட்டாரம் | பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் |
முனையங்கள் | |
சேவை | |
செய்குநர்(கள்) | வடக்கு ரயில்வே மண்டலம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1971 |
தொழில்நுட்பம் | |
தண்டவாள நீளம் | 212 km (132 mi) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2 |
தட அளவி | அகலப் பாதை |
மின்மயமாக்கல் | முடிவுற்றது |
இயக்க வேகம் | மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை |
மிக உயர்ந்த நிலைமுகம் | ஜலந்தர் 256 m (840 அடி), பதான்கோட் 352 m (1,155 அடி), ஜம்மு தாவி 414 m (1,358 அடி) |
ஜலந்தர்-ஜம்மு இருப்புப் பாதை (Jalandhar–Jammu line), இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்தில் அமைந்த இந்த இருப்புப் பாதையானது, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தையும், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரத்தையும் இணைக்கிறது. இந்த இருப்புப் பாதை 216 km (134 mi) நீளத்தில் உள்ளது. இந்த இருப்புப்பாதையானது சி வகுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த இரட்டை இருப்புப்பாதையில் தொடருந்துகள் மணிக்கு சராசரி 110 கிலோ மீட்டர் வரை இயக்கப்படுகிறது.212 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இருப்புப்பாதையில் மொத்தம் 41 தொடருந்து நிலையங்கள் உள்ளது.[1]