ஜயதேவ உயன்கொட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட (Jayadeva Uyangoda) இலங்கையின் ஒரு கல்விமானும், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியரும் ஆவார்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடதுசாரி மாணவராக இருந்த இவர் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான உறுப்பினராக செயல்பட்டார். 1971ம் ஆணடு இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறிது காலத்தின் பின் விடுதலை செய்யப்பட்ட உயன்கொட தனது கலாநிதிப்பட்டப்படிப்பை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கு அவர் "வங்காளதேசத்தின் தேசியவாதமும் அரச கட்டமைப்பும்" என்ற தலைப்பில் கீழ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார்.

இலங்கையின் முரண்பாடுகளும் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அதிகம் பேசப்படுகின்றார். காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தோடு இணைந்து இலங்கைக்கான மாதிரி அரசியல் யாப்பொன்றினை 1999 ஆம் ஆண்டில் வரைந்தார்.

தற்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் தலைவராக உள்ளார். அததுடன் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். இவர் இலங்கை மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

"பிரவத" என்ற இதழின் ஸ்தாபக ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். ஆங்கில மொழியில் வெளிவரும் இச் சஞ்சிகையானது இலங்கை தெற்காசிய நாடுகள் தொடர்பிலான தகவல்களைத் தாங்கி வருகின்றது.

சமாதனம் இன ஐக்கியம் முரண்பாடுக் கல்வி தொடர்பில் அரசியல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் கட்டுரைகளையும் எழுதிவருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயதேவ_உயன்கொட&oldid=2217982" இருந்து மீள்விக்கப்பட்டது