உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்மு இரயில்வே கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்மு இரயில்வே கோட்டம்
கண்ணோட்டம்
தற்போதைய செய்குநர்வடக்கு இரயில்வே
தலைமையகம்ஜம்மு நகரம்
வட்டாரம்சம்மு காஷ்மீர்
செயல்பாட்டின் தேதிகள்6 சனவரி 2025–
முந்தியவைஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டம்
தொழில்நுட்பம்
நீளம்742 கிலோ மீட்டர்
Other
இணையதளம்nr.indianrailways.gov.in

ஜம்மு இரயில்வே கோட்டம் (Jammu railway division), இந்திய இரயில்வேயின் வடக்கு மண்டலத்தில் உள்ள 6 இரயில்வே கோட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையிடம் ஜம்மு நகரத்தில் செயல்படுகிறது. ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தின்[2] ஜம்மு காஷ்மீர் பகுதிகளைப் பிரித்து இப்புதிய ஜம்மு இரயில்வே கோட்டம் 6 சனவரி 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி]]யால் திறந்து வைக்கப்பட்டது.[3]ஜம்மு இரயில்வே கோட்டம், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் லடாக் போன்ற பகுதிகளும் பயடைய உள்ளது.[4]இக்கோட்டத்தின் முதல் மேலாளர் இ. சினீவாசன் ஆவார்.[5]

தற்போது ஜம்மு இரயில்வே கோட்டத்தின் மொத்த இருப்புப்பாதையின் நீளம் 742.1 km (461.1 mi) ஆகும். ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் உள்ள கீழ்கண்ட தொடருந்து நிலையங்கள் ஜம்மு இரயில்வே கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  1. அவந்திபுரா தொடருந்து நிலையம்
  2. அனந்தநாக் தொடருந்து நிலையம்
  3. இராம்நகர் தொடருந்து நிலையம்
  4. கக்கபோரா தொடருந்து நிலையம்
  5. கதுவா தொடருந்து நிலையம்
  6. காசிகுண்ட் தொடருந்து நிலையம்
  7. சங்கர் தொடருந்து நிலையம்
  8. சங்கல்தன் தொடருந்து நிலையம்
  9. சிறிநகர் தொடருந்து நிலையம்
  10. சோப்பூர் தொடருந்து நிலையம்
  11. உதம்பூர் தொடருந்து நிலையம்
  12. பட்காம் தொடருந்து நிலையம்
  13. பட்டான் தொடருந்து நிலையம்
  14. பம்போர் தொடருந்து நிலையம்
  15. பன்ஸ்காம் தொடருந்து நிலையம்
  16. பனிஹால் தொடருந்து நிலையம்
  17. பாரமுல்லா தொடருந்து நிலையம்
  18. ரியாசி தொடருந்து நிலையம்
  19. ஜம்மு தாவி தொடருந்து நிலையம்
  20. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம்

எதிர்காலத் திட்டங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Railway Zones and Divisions in The Country". Press Information Bureau. Ministry of Railways (Government of India). 21 July 2017. Retrieved 1 January 2025.
  2. "Ferozepur faces economic setback as Jammu Railway Division is carved out".
  3. PM Modi inaugurates Jammu rail division
  4. Rail Division for Jammu and train to Kashmir – Modi govt’s 2025 railway plans for J&K
  5. "E Srinivas Appointed First Divisional Railway Manager Of Jammu Rail Division".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு_இரயில்வே_கோட்டம்&oldid=4191145" இலிருந்து மீள்விக்கப்பட்டது