ஜமைக்கா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜமைக்கா
Shirt badge/Association crest
அடைபெயர்ஜமைக்கா தேசிய அணி[1]
கூட்டமைப்புஜமைக்கா காற்பந்து கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புகரீபியன் காற்பந்து ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்வின்பிரைடு ஷாஃபர்
அணித் தலைவர்ரோடோல்ஃப் ஆஸ்டின்
Most capsஇயான் கூடிசன் (128)
அதிகபட்ச கோல் அடித்தவர்லூட்டன் செல்ட்டன் (35)
தன்னக விளையாட்டரங்கம்சுதந்திரப் பூங்கா
பீஃபா குறியீடுJAM
பீஃபா தரவரிசை46 Green Arrow Up Darker.svg 9 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை27 (ஆகத்து 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை116 (அக்டோபர் 2008)
எலோ தரவரிசை80 (சூன் 2015)
அதிகபட்ச எலோ36 (பெப்ரவரி 1998)
குறைந்தபட்ச எலோ146 (மே 1984)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 எயிட்டி 1–2 ஜமேக்கா 
(எயிட்டி; 22 மார்ச் 1925)[2][3]
பெரும் வெற்றி
 ஜமேக்கா 12–0 பிரித்தானிய கன்னித் தீவுகள் 
(கிராண்ட் கேமன், கேமன் தீவுகள்; 4 மார்ச் 1994)
 ஜமேக்கா 12–0 செயிண்ட் மார்டின் 
(கிங்ஸ்டன், யமைக்கா; 24 நவம்பர் 2004)
பெரும் தோல்வி
 கோஸ்ட்டா ரிக்கா 9–0 ஜமேக்கா 
(சான் ஹொசே; 24 பெப்ரவரி 1999)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1998 இல்)
சிறந்த முடிவுசுற்று 1; 1998
கான்காகேஃப் தங்கக்கோப்பை
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுஇரண்டாவது; 2015
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2015 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை; 2015

ஜமைக்கா தேசிய காற்பந்து அணி ( Jamaica national football team) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் ஜமைக்கா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இது ஜமைக்கா காற்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் முதன்மை அணிகளில் இதுவும் ஒன்று. இந்த அணியினர் கரீபியன் கோப்பையை ஆறு முறை வென்றுள்ளனர்; கடைசியாக 2014ஆம் ஆண்டின் இறுதியாட்டத்தில் டிரினிடாடு மற்றும் டொபாகோ தேசிய காற்பந்து அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றினர்.[4] வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக் கோப்பை இறுதியாட்டதிற்கு முன்னேறிய ஒரே கரீபியன் நாடாக ஜமைக்கா உள்ளது; 2015ஆம் ஆண்டில் தங்கக் கோப்பை இறுதியாட்டத்தில் பங்கேற்று மெக்சிக்கோவிடம் தோற்றது.

ஜமைக்கா உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டிகளுக்கு ஒருமுறை (1998) தகுதி பெற்றது. ஐக்கிய அமெரிக்கா, ஹொண்டுராஸ், கோஸ்ட்டா ரிக்கா போன்று மெக்சிக்கோவுடன் உலகக்கோப்பை தகுதியாட்டத்தில் சமநிலை எய்திய கான்காகேஃப் அணிகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Reggae Boyz". மூல முகவரியிலிருந்து 2017-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 ஆகத்து 2014.
  2. Courtney, Barrie (5 சூன் 2006). "Jamaica – List of International Matches". RSSSF. பார்த்த நாள் 3 நவம்பர் 2010.
  3. "Jamaica Men’s National Football Team International Record". Jamaica Football Federation. மூல முகவரியிலிருந்து 2017-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 நவம்பர் 2010.
  4. "Reggae Boyz defeat T&T to take 2014 Caribbean Cup – News". Jamaica Observer.
  5. "Mexico 0–0 Jamaica Match Report". மூல முகவரியிலிருந்து 2016-03-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 ஆகத்து 2014.

வெளி இணைப்புகள்[தொகு]