உள்ளடக்கத்துக்குச் செல்

ஜமுனா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமுனா தேவி
மத்திய பிரதேச துணை முதல்வர்
பதவியில்
1998–2003
மத்திய பிரதேச எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
2003–2010
முன்னையவர்பாபுலா கௌர்
பின்னவர்சத்ய தேவ் கத்தாரே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-11-29)29 நவம்பர் 1929
சர்தார்பூர்,
இறப்பு24 செப்டம்பர் 2010(2010-09-24) (அகவை 80)
இந்தூர், மத்திய பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள்1 மகள்
பெற்றோர்சுக்ஜி(தந்தை)
வேலைஅரசியல்வாதி
As of 17 June, 2018
மூலம்: ["Biography" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.]

ஜமுனா தேவி(Jamuna devi) (29 நவம்பர் 1929 - 24 செப்டம்பர் 2010) மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆவார். அவர் மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றியவர் ஆவார். [1] ஜமுனா தேவி ஜாபுவா நாடாளுமன்ற தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் (1962-67) தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் 1978 முதல் 1981 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [2]

தொழில்

[தொகு]

ஜமுனா தேவி 1952 முதல் 1957 வரை மத்திய பாரத் மாநிலத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், பின்னர் 1962 முதல் 1967 வரை ஜாபுவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1978 முதல் 1981 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

ஜமுனா தேவி அர்ஜுன் சிங், மோதிலால் வோரா மற்றும் ஷியாமா சரண் சுக்லா ஆகியோரின் இணை அமைச்சராக பணியாற்றினார். ஆனால் திக்விஜயா சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராக சேர்க்கப்பட்டார், பின்னர் 1998 ல் மத்திய பிரதேச துணை முதல்வராக பதவி உயர்வு பெற்றார், இதனால் முதல் பெண் துணை முதல்வர் என்னும் பெருமையை ஜமுனா தேவி பெற்றார்.

2003 ல் இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரத்தை இழந்தபோது, அவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியமர்த்தப்பட்டு 2010 வரை பதவியில் நீடித்தார். [3] [4]

இறப்பு

[தொகு]

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜமுனா தேவி செப்டம்பர் 24, 2010 அன்று இந்தூரில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]

[5] [6] [7] [8] [9]

  1. http://mpvidhansabha.nic.in/lop-JamunaDevi.htm
  2. http://www.dnaindia.com/india/report-congress-leader-jamuna-devi-passes-away-1442360
  3. Cong leader Jamuna Devi passes away
  4. MP Leader of Oppn Jamuna Devi dies at 80
  5. MP Leader of Oppn Jamuna Devi dies at 80
  6. Singh, Mahim Pratap (24 Sep 2010). "Veteran Congress leader Jamuna Devi passes away" (in English). The Hindu. Bhopal: thehindu.com. http://www.thehindu.com/news/national/other-states/Veteran-Congress-leader-Jamuna-Devi-passes-away/article16046016.ece. பார்த்த நாள்: 17 June 2018. 
  7. "Cong leader Jamuna Devi passes away" (in English). ITGD Bureau. Bhopal: indiatoday.in. 24 Sep 2010. https://www.indiatoday.in/india/story/cong-leader-jamuna-devi-passes-away-82604-2010-09-24. பார்த்த நாள்: 17 June 2018. 
  8. "MP's senior INC leader Jamuna Devi passes away" (in Hindi). Indore: hindi.oneindia.com. 24 Sep 2010. https://hindi.oneindia.com/news/2010/09/24/mp-congress-leader-jamuna-devi-passes-away.html. பார்த்த நாள்: 17 June 2018. 
  9. "MP Leader of Oppn Jamuna Devi aka Buaji is dead" (in English). UNI. Indore: news.webindia123.com. 24 Sep 2010 இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180617165117/https://news.webindia123.com/news/articles/India/20100925/1594898.html. பார்த்த நாள்: 17 June 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_தேவி&oldid=3710606" இலிருந்து மீள்விக்கப்பட்டது