ஜமுனா துடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமுனா துடு
in 2017
பிறப்பு19 திசம்பர் 1980 (1980-12-19) (அகவை 43)[1]
மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா [2]
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்"லேடி டார்சன்"
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை [3]
அறியப்படுவதுசுற்றுச்சூழல் ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
மான்சிங் துடு (தி. 1998)
[4]
விருதுகள்பத்மசிறீ

ஜமுனா டுடு (Jamuna Tudu) ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலராவார். முதலில் இவரும் மற்ற ஐந்து பெண்களும் தனது கிராமத்திற்கு அருகே சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதைத் தடுத்தனர். இது பின்னர் ஒரு அமைப்பாக விரிவடைந்தது. சார்க்கண்டுவில் உள்ள "மர மாஃபியாக்கள்" மற்றும் நக்சலைட்டுகளை தடுத்து வருதற்காக பத்திரிக்கைகளால் 'லேடி டார்சன்' என்று அழைக்கப்படுகிறார்.

ஜார்க்கண்டுவில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் “வான் சுரக்சா சமிதி” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜமுனா துடு 1980 திசம்பர் 19 அன்று இந்தியாவின் ஒடிசாவின் மயூர்பஞ்சின் ராயரங்க்பூரில் பிறந்தார்.[6] தனக்கு 18 வயதாக இருந்தபோது காடுகளுக்காக போராட முடிவு செய்து வில் மற்றும் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளில் சுற்றித் திரிந்தார். மேலும் மர மாஃபியாக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து காவலர்களிடம் புகார் செய்ய ஆரம்பித்தார்.[7]

இவர், இயற்கையை மிகவும் நேசிக்கிறார். இவரது இந்தப் பயணம் 1998இல் தொடங்கியது. இவர், திருமணத்திற்குப் பிறகு சகுலியா தொகுதியில் உள்ள முத்துர்காம் கிராமத்தை அடைந்தார். அந்த நேரத்தில் வன மாஃபியா கும்பல் அளவுக்கதிகமாக முதுர்காம் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தது. காட்டின் இந்த நிலையைப் பார்த்த ஜமுனா, மரங்களை காப்பாற்ற முடிவு செய்து அவர்களுகெதிராக போரட முடிவு செய்தார். பின்னர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இவரது குடும்பத்தினரால் இதையெல்லாம் செய்யவிடாமல் தடுக்கப்பட்டார். ஆனால் அவர் கிராமத்தின் பெண்களை ஒன்றிணைத்து காட்டைக் காப்பாற்றும் பிரச்சாரத்தில் இறங்கினார். பல முறை இவர்கள் தாக்குதல்களுக்கு ஆளானாலும் ஒருபோதும் கைவிடவில்லை, காட்டைக் காப்பாற்றுவதற்கான முடிவு உறுதி செய்யப்பட்டது.[8]

துடு தனது கிராமத்திற்கு அருகே சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதைத் தடுக்க ஐந்து பெண்களுடன் "வான் சுரக்சா சமிதி" யை உருவாக்கினார், பின்னர் இது விரிவடைந்தது.[9][10][11] 2020ஆம் ஆண்டில் சார்கண்டுவின் காடுகளைப் பாதுகாக்க இவரும் சாமி முர்முவும் வனப்பாதுகாப்பு படைகளில் சேரப்போவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் பத்திரிகைகளில் லேடி டார்சன்கள் என்று அழைக்கப்பட்டனர். சாமி முர்மு தனது அமைப்பில் 3,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளார். தாங்கள் இணைந்து பணியாற்றுவதால் கூடுதல் வெற்றியை அடைய முடியும் என்று நம்புகிறார்கள் [12]

விருதுகள்[தொகு]

மன் கி பாத்[தொகு]

பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கி பாத் நிகழ்ச்சியில் இவரது பணியைப் பாராட்டினார். மர மாஃபியாக்களிடமிருந்தும், நக்சலைட்டுகளிடமிருந்தும் இரும்பு எடுக்கும் சாகசத்தை ஜமுனா துடு செய்தார் என்று உரையாற்றினார். இவர் 50 ஹெக்டேருக்கும் மேற்பட்ட காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றியது மட்டுமல்லாமல், 10,000 பெண்களை ஒன்றிணைத்து, மரங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க அவர்களை ஊக்குவித்து வருகிறார். இன்று கிராமவாசிகள் ஒரு குழந்தை பிறந்த நாளில் 18 மரங்களையும், சிறுமிகளின் திருமணத்திற்கு 10 மரங்களையும் நட்டு வருகின்றனர்.[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. "महिला ब्रिगेड संग जंगल माफिया से लेती हैं लोहा, राष्ट्रपति से सम्मान पा चुकी हैं जमुना टुडू" (in hi). Jansatta. 13 August 2019. https://www.jansatta.com/photos/picture-gallery/lady-tarzan-jamuna-tudu-takes-timber-mafia-know-unknown-facts-see-photos/1117888/. 
  2. "लकड़ी माफिया से निपट रही झारखंड की ये लेडी टार्जन". Firstpost Hindi. 12 November 2017. https://hindi.firstpost.com/india/odisha-born-jamuna-tudu-the-lady-tarzan-who-dares-timber-mafia-in-jharkhand-pr-66394.html. 
  3. "पेड़ों की रक्षा के लिए दांव पर लगाई अपनी जान, पद्मश्री जमुना टुडू को अब दुनिया कहती है लेडी टार्जन". News18 India. https://hindi.news18.com/news/jharkhand/east-singhbum-padmashree-jamuna-tudu-alone-fought-to-protect-trees-now-being-called-lady-tarzan-jhnj-2895799.html. 
  4. "पर्यावरण संरक्षण के संकल्प ने गांव की बहू को दिलाया वन रत्न सम्मान : यमुना" (in hi). Dainik Bhaskar. 30 July 2017. https://www.bhaskar.com/news/JHA-MAT-latest-chakulia-news-021503-3087514-NOR.html. 
  5. "Meet Padma Shri Jamuna Tudu: ‘Lady Tarzan’ Of Jharkhand Forests". KalingaTV. 30 January 2019. https://kalingatv.com/features/meet-padma-shri-jamuna-tudu-lady-tarzan-of-jharkhand-forests/. 
  6. "Bollywood discovers Chakulia’s Lady Tarzan". www.telegraphindia.com. https://www.telegraphindia.com/jharkhand/bollywood-discovers-chakulias-lady-tarzan/cid/1695706. 
  7. "Independence Day: इन 5 आदिवासी महिला कार्यकर्ताओं ने उठाई बुलंद आवाज, 'आजादी' के सही अर्थ से कराया रूबरू". News18 India. https://hindi.news18.com/news/lifestyle/independence-day-2020-these-five-tribal-women-activists-raised-loud-voice-got-aware-of-the-true-meaning-of-freedom-pur-3203770.html. 
  8. "Lady Tarzan Jamuna Tudu who takes on timber mafia". Indian Express. 12 November 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
  9. "Padma Awards" (PDF). Padma Awards ,Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
  10. "Jamuna Tudu and her team protect the jungle around her village from the forest mafia". Srijani Ganguly. India Today. 22 November 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  11. "Women Transforming India Awards 2017: Meet the 12 incredible winners who transformed India". Financial Express. 29 August 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  12. "Green warriors to join forces". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  13. "झारखंड की चार हस्तियों को पद्मश्री पुरस्कार" (in hi). Dainik Jagran. https://www.jagran.com/jharkhand/ranchi-four-people-of-jharkhand-padma-shri-award-18892707.html. 
  14. "Women Transforming India - Jamuna Tudu" (PDF). Archived from the original (PDF) on 29 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Women Transforming India - NITI Aayog" (PDF). niti.gov.in. Archived from the original (PDF) on 2021-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
  16. "This Tribal Lady & Her Band Saved 50 Hectares of Forests for 20 Years!". The Better India. https://www.thebetterindia.com/120193/this-tribal-lady-and-her-band-of-women-saved-50-hectares-of-forests-for-20-years/. 
  17. Kh, Tara; elwal (2017-10-18). "Reese Witherspoon, Jennifer Lawrence Talk About Sexual Harassment". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  18. "मन की बात कार्यक्रम में झारखंड की जमुना टू डू के द्वारा किए गए कार्यों की सराहना" இம் மூலத்தில் இருந்து 8 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190508083042/http://newstodayjharkhand.com/%E0%A4%AE%E0%A4%A8-%E0%A4%95%E0%A5%80-%E0%A4%AC%E0%A4%BE%E0%A4%A4-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%95%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%82-%E0%A4%9D%E0%A4%BE/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_துடு&oldid=3930384" இலிருந்து மீள்விக்கப்பட்டது