ஜமீலா நிசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமீலா நிசாத்
Jameela Nishat
ஐதராபாத்து இலக்கியவிழாவில் ஜமீலா நிசாத்-2017
ஐதராபாத்து இலக்கியவிழாவில் ஜமீலா நிசாத்-2017
பிறப்பு1955
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா.
தொழில்கவிஞர், தொகுப்பாசிரியர், கல்வியாளர், பெண்ணியவாதி
தேசியம்இந்தியா
கல்விமுதுகலை
வகைகஜல், நசம்
கருப்பொருள்இலக்கியம்

ஜமீலா நிசாத் (Jameela Nishat)(பிறப்பு 1955) என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தினைச் சேர்ந்த உருது கவிஞர், ஆசிரியர் மற்றும் பெண்ணியவாதி ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

ஜமீலா நிசாத் ஐதராபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சையத் பின் முகமது ஒரு ஓவியக் கலைஞர். ஓவியக் கலைஞர் மக்புல் ஃபிதா உசைனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.[2]

தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இள்லாமியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கிதாப் நுமா ஆய்விதழிலும் பிற கவிதை இதழ்களிலும் இவர் எழுதி வந்தார்.  இவரது முதல் புத்தகம், லாவா, கவிதைகளின் தொகுப்பு ஆகும். இந்தப் புத்தகத்தினை 2000-ல் வெளியிட்டார்.  ஹோஷாங் மெர்ச்சன்ட் எனும் கவிதைத் தொகுப்பினை லாவாவிலிருந்து மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பு 2008-ல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது.[3] இவர் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.[4][5]

இசுபாரோ 1999-ல் இவரது வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சிறு புத்தகத்தை வெளியிட்டார்.[6] எச். எல். எப். ஐதராபாத் இலக்கிய விழாவில் பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.[7][8]

3 சூன் முதல் சூன் 8, 2015 வரை இத்தாலியின் சலேர்னோவில் நடைபெற்ற மாற்றத்திற்கான 100 ஆயிரம் கவிஞர்கள் மாநாட்டில் பெண்ணியக் கவிஞர்களில் ஒருவராக இருந்தார்.[9]

2012ஆம் ஆண்டில், முஸ்லீம் பெண்களின் நலனுக்காக "ஷாஹீன் கலெக்டிவ் - ஷாஹீன் பெண்கள் வளங்கள் மற்றும் நலன்புரி சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார்.[10][11][12] பெண்களின் நலனுக்காகவும், குடும்ப மற்றும் சமூக வன்முறைகளை ஒழிப்பதற்காகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.[13][14]

வெளியீடு[தொகு]

  • பட்டர்பிளை கேரஸஸ் (2015), வானொலி நேர்காணல் .
  • லாம்ஸ் கி சவுகாட் (கல்வி வெளியீட்டு நிலையம், புது தில்லி, 2006)
  • லாம்ஹே கி அன்க் (பெண்களுக்கான அசுமிதா வள மையத்தால் வெளியிடப்பட்டது, செகந்திராபாத், 2002)
  • லாவா (2000)
  • இன்கேஷாஃப் தொகுப்பு, டெக்கான் பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு, பெண்களுக்கான அசுமிதா வள மையம், செகந்திராபாத்து, 2000.

விருதுகள்[தொகு]

  • மக்தூம் விருது (1972)

[ மேற்கோள் தேவை ]

மேற்கோள்கள்[தொகு]

  1. Poetry International Rotterdam. "Jameela Nishat - Her Profile". Poetry International Rotterdam, September, 2007. Archived from the original on 20 April 2017. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  2. The Sunday Tribune. "Pioneer of Change". The Tribune - Tribune India.
  3. The Hindu. "A universe of verse". The Hindu Newspaper.
  4. Ammu Joseph. Storylines: Conversations with Women Writers, Pages, 233-237. Women's World India and Asmita Resource Centre for Women, 2003. 
  5. Sparrow. "Jameela Nishat A Poem Slumbers In My Heart". Sparrow, January, 1999. Archived from the original on 3 July 2017. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  6. MuseIndia. "Hyderabad Literary Festival". Muse India. Archived from the original on 14 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  7. HydLitFest. "HLF". Archived from the original on 19 January 2015. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  8. succedeoggi.it (3 June 2015). "Alla Fondazione Alfonso Gatto di Salerno,Poesia senza bavaglio". succedeoggi.it.
  9. The Hindu. "Be the change you want". The Hindu Newspaper.
  10. New Indian Express. "Asmitha Resource Center Observes Human Rights Day". New Indian Express, 11 December 2013.
  11. Journeys For Change. "Journeys for Change - Alice Chou on Shaheen, bringing Muslim and Hindu women to empower themselves". Journeys for Change. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
  12. NewsWala. "Members of NGOs Wep-Ushassu and Shaheen Resource Centre for Women take out rally on International Day of the Girl". Newswala, 11 October 2012. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
  13. Vanitha TV. "Ms.Jameela Nishat - Shaheen Women's Resource and Welfare Association". Vanitha TV.
  14. The Hindu. "Devi Award". The New Indian Express.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீலா_நிசாத்&oldid=3679882" இலிருந்து மீள்விக்கப்பட்டது