ஜமின் கோடங்கிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமீன் கோடங்கிபட்டி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் . கிழக்கில் ராமநாதபுரம் கடலாடி பகுதியையும் வடக்கில் அருப்புக்கோட்டை போன்ற முக்கிய நகரங்களின் மத்தியில் அமைந்துள்ள சிறிய கிராமம்.

ஊரின் வரலாறு[தொகு]

பல வருடங்களுக்கு முன் குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் இப்பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொண்டு வாழ்கிறார்கள் . இவர்கள் எட்டயபுரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், எட்டயபுர ஜமீன் வாரிசுகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் மாந்திரீகம், குறி சொல்லுவது போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்கள்.

சிறப்பு[தொகு]

இவ்வூரில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு கலையை கற்று வருகின்றனர் . இங்குள்ளவர் அனைவரும் தேவராட்டம் என்ற பழைய ஆடல்களை ஆடும் திறமை பெற்றவர்கள். இவ்வூரில் அதிகமாக ராஜகம்பளம் நாயக்கர் மக்களே வாழ்கிறார்கள். ஒரு சில பிள்ளைமார், சக்கிலியர் போன்றோர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் ஆடும் தேவராட்டம், சேர்வை ஆட்டம், சேவயாட்டம், கும்மி ஆட்டம் போன்றவை புகழ் பெற்றது. இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் இனத்தை சேர்ந்தவர்கள். இவ்வினத்தவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவ்வாட்டங்கள் கண்டிப்பாக நடைபெறும். இவ்வூரில் உள்ளவர்கள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மக்கள் தங்களின் குருவின் பேச்சை மீறாமல் வாழ்பவர்கள். பிற இனத்தை சேர்ந்தவர்களை தங்கள் பகுதிகளில் அனுமதிப்பது கிடையாது .

கோவில்கள்[தொகு]

பழம்பெருமை மிக்க அப்பணசாமி கோவில், ஜக்கம்மா கோவில் , சிலேக்கம்மா கோவில் , வீரசின்னைய கோவில், பிள்ளையார் கோவில் போன்ற பல குல தெய்வங்களை கொண்டுள்ளது இந்த கிராமம் . இவ்வூருக்கு பலர் குறி கேட்க வருவார்கள். பேயோட்டம், பில்லி சூனியம் , மாந்தரிகம் போன்றவைகளும் இங்கு செய்ய படுகின்றன .

சான்றுகள்[தொகு]

ஜமின் கோடாங்கிபட்டி நாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமின்_கோடங்கிபட்டி&oldid=3484158" இலிருந்து மீள்விக்கப்பட்டது