ஜமால் காசோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜமால் காசோகி
Jamal Khashoggi
Jamal Khashoggi in March 2018 (cropped).jpg
2018 இல் காசோகி
பிறப்புஜமால் அகமது காசோகி
அக்டோபர் 13, 1958(1958-10-13) [1]
மதீனா, சவூதி அரேபியா
இறப்பு2 அக்டோபர் 2018(2018-10-02) (அகவை 59)[2]
சவூதி அரேபிய தூதரகம்,
இசுதான்புல், துருக்கி
இருப்பிடம்ஐக்கிய அமெரிக்கா[3]
தேசியம்சவூதி அராபியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர், நூலாசிரியர்
வலைத்தளம்
jamalkhashoggi.com

ஜமால் காசோகி (Jamal Khashoggi, அரபு மொழி: جمال خاشقجي, 13 அக்டோபர் 1958 – 2 அக்டோபர் 2018) என்பவர் ஒரு சவூதி அராபிய ஊடகவியலாளரும்,[4] நூலாசிரியரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார். இவர் அல்-அராப் நியூசு பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும், அந்நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் பணியாற்றியவர்.[5] இவர் சவூதி அரேபியாவில் இருந்து வெளிவரும் அல்-வத்தான் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி, சவூதி அராபிய முற்போக்காளர்களின் மேடையாக அதனைப் பயன்படுத்தினார்.[6]

2017 செப்டம்பரில் காசோகி சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறினார். சவூதி அரசு தன்னை டுவிட்டரில் இருந்து தடை செய்து விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.[7] அதன் பின்னர் அவர் சவூதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். குறிப்பாக அவர் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், மன்னர் சல்மான் ஆகியோரைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[4] ஏமனில் சவூதி அரேபியாவின் தலையீட்டைக் கண்டித்து எழுதினார்.[8]

படுகொலை[தொகு]

காசோகி எடிசு செங்கிசு என்ற துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார். தனது முன்னாள் மனைவியின் விவாகரத்து சான்றிதழ் வாங்குவதற்காக அவர் 2018 அக்டோபர் 2 இல் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அவர் சென்றிருந்தார்.[9] அதன் பின்னர் அவர் அக்கட்டடத்தில் இருந்து வெளியே வரவில்லை. அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.[10] அவர் அங்கு வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன.[11][12] ஆனால் அவர் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக சவூதி அரசு தெரிவித்து வந்தது.[13][14] துருக்கிய அரசின் அழுத்தத்தின் பின்னர், சவூதிய, துருக்கி அதிகாரிகள் 2018 அக்டோபர் 15 இல் தூதரகத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காசோகி துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக 2018 அக்டோபர் 20 அன்று சவூதி அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிகழ்வில் சம்பத்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் 18 சவூதி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.[15][16] கசோகி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. Hubbard, Ben; Gladstone, Rick; Landler, Mark (16 October 2018). "Trump Jumps to the Defense of Saudi Arabia in Khashoggi Case" (in en). The New York Times. https://www.nytimes.com/2018/10/16/world/middleeast/pompeo-saudi-arabia-turkey.html. ""Mr. Khashoggi, who wrote columns for The Washington Post, lived in the United States, and his 60th birthday was on Saturday [October 13]."" 
 2. "Khashoggi 'died after fight' – Saudis". 19 October 2018. https://www.bbc.com/news/world-middle-east-45923217. 
 3. "What we know (and don't) about missing Saudi journalist Jamal Khashoggi". பார்த்த நாள் 16 October 2018.
 4. 4.0 4.1 "Jamal Khashoggi: An unauthorized Turkey source says journalist was murdered in Saudi consulate". BBC News. 7 October 2018. https://www.bbc.com/news/world-europe-45775819. 
 5. "Speakers". International Public Relations Association – Gulf Chapter (IPRA-GC) (2012). மூல முகவரியிலிருந்து 11 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 May 2012.
 6. Hendley, Paul (17-05-2010). "Saudi newspaper head resigns after run-in with conservatives". Al Hdhod. https://en.hdhod.com/Saudi-newspaper-head-resigns-after-run-in-with-conservatives_a3996.html. பார்த்த நாள்: 11-10-2018. 
 7. "Opinion – Saudi Arabia wasn't always this repressive. Now it's unbearable.". பார்த்த நாள் 7 October 2018.
 8. "Turkey says journalist Khashoggi 'killed at Saudi consulate'". France 24. 7 October 2018. https://www.france24.com/en/20181007-turkish-police-journalist-jamal-khashoggi-killed-saudi-consulate-mbs-washington-post. 
 9. Coskun, Orhan. "Exclusive: Turkish police believe Saudi journalist Khashoggi was killed in consulate – sources" (in en-US). Reuters. https://www.reuters.com/article/us-saudi-politics-dissident/exclusive-turkish-police-believe-saudi-journalist-khashoggi-was-killed-in-consulate-sources-idUSKCN1MG0HU?il=0&utm_source=reddit.com. 
 10. "Turkey to search Saudi Consulate for missing journalist". The Washington Post. 9 October 2018. https://www.washingtonpost.com/world/europe/post-publishes-possibly-last-image-of-missing-saudi-reporter/2018/10/09/e2e8acae-cb82-11e8-ad0a-0e01efba3cc1_story.html?utm_term=.285330495dfc. பார்த்த நாள்: 13 October 2018. 
 11. Nicholas, Cecil (10 October 2018). "Jamal Khashoggi: Saudi journalist 'cut up with bone saw in Pulp Fiction murder at consulate in Istanbul'". London Evening Standard. https://www.standard.co.uk/news/world/jamal-khashoggi-saudi-journalist-cut-up-with-bone-saw-in-pulp-fiction-murder-inside-consulate-in-a3958256.html. பார்த்த நாள்: 14 October 2018. 
 12. "Sen. Corker: Everything points to Saudis being responsible for missing journalist". MSNBC. 12 October 2018. https://www.msnbc.com/andrea-mitchell-reports/watch/sen-corker-everything-points-to-saudis-being-responsible-for-washington-post-contributor-s-disappearance-1341977667970. 
 13. "Turkish prosecutors 'find evidence of Jamal Khashoggi killing'" (15 October 2018). பார்த்த நாள் 17 October 2018.
 14. ""Where Is Jamal?": Fiancee Of Missing Saudi Journalist Demands To Know". The Washington Post. NDTV. 9 October 2018. https://www.ndtv.com/world-news/where-is-jamal-fiancee-of-missing-saudi-journalist-demands-to-know-1928951. பார்த்த நாள்: 13 October 2018. 
 15. Hubbard, Ben. "Jamal Khashoggi Is Dead, Saudi Arabia Says". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/10/19/world/middleeast/jamal-khashoggi-dead-saudi-arabia.html?emc=edit_na_20181019&nl=breaking-news&nlid=65531903ing-news&ref=cta. பார்த்த நாள்: 19 October 2018. 
 16. "Jamal Khashoggi died in fight at Istanbul consulate, Saudi state TV claim". CNN. பார்த்த நாள் 20 October 2018.
 17. "மாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா". பிபிசி தமிழ் (20-10-2018). பார்த்த நாள் 21-10-2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்_காசோகி&oldid=2589984" இருந்து மீள்விக்கப்பட்டது