ஜப்பானிய செம்படை
ஜப்பானிய செம்படை Japanese Red Army 日本赤軍 | |
---|---|
தொடக்கம் | 1971 – |
தாக்குதல்கள் | டெல் அவிவ், லொட் விமானநிலையப் படுகொலைகள் (1972), ஜப்பானிய விமானக் கடத்தல் (1970), மலேசிய விமானக் கடத்தல் (சந்தேகம்) |
ஜப்பானிய செம்படை (Japanese Red Army, 日本赤軍, நிஹோன் செக்கிகன், JRA) என்பது புசாக்கோ சிகெனோபு என்னும் ஜப்பானியப் பெண் தீவிரவாதியினால் பெப்ரவரி 1971 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். ஜப்பானிய கம்யூனிச முன்னணியில் இருந்து விலகி இவ்வமைப்பை இவர் ஆரம்பித்தார். இவ்வமைப்பு உச்ச நிலையில் இருந்தபோது இதில் மொத்தம் 40 பேர் உறுப்பினர்களாக இருந்ததாக அறியப்படுகிறது. இவ்வமைப்பு ஒருகாலத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இடதுசாரி அமைப்பாக இருந்தது[1].
ஜேஆர்ஏ அமைப்பு பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி (PFLP) உடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது. 1980களின் ஆரம்பத்தில் ஜப்பானில் இதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால் இது நிதி, பயிற்சி, ஆயுதங்கள் போன்றவற்றிற்கு PFLP ஐயிலேயே பெரிதும் தங்கியிருந்தது.
இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள் ஜப்பானிய அரசையும் அதன் மன்னராட்சியையும் இல்லாதொழித்து உலகப் புரட்சியை ஏற்படுத்துவதே.
குறிப்புகள்
[தொகு]- ↑ Japanese Red Army (JRA) Profile The National Memorial Institute for the Prevention of Terrorism Terrorism Knowledge Base (online)