ஜப்பானியக் காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Japanese Quail
3 Japanese quails less than 1 year old.JPG
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Phasianidae
பேரினம்: Coturnix
இனம்: C. japonica
இருசொற்பெயர்
Coturnix japonica
Temminck & Schlegel, 1849

ஜப்பானியக் காடை , (Coturnix japonica ), கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது. முழு வளர்ச்சி பெற்ற காதல் 20 செ.மீ. நீளம் வரை இருக்கும். இவ்வினம், அதன் வாழ்விடங்களில், பரவலாகக் காணப்படுகின்றன.

ஜப்பானியக் காடைகளின் பயன்பாடு[தொகு]

ஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

ஜப்பானியக் காடை வளர்ப்பு பற்றிய பாடல்கள்[தொகு]

கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கண்ணூர் க்ரிஷி விஞ்ஞான கேந்திரம், ஜப்பானியக் காடை வளர்ப்பு பற்றிய பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானியக்_காடை&oldid=1552785" இருந்து மீள்விக்கப்பட்டது