ஜபல் அலி துறைமுகம்

ஆள்கூறுகள்: 25°00′41″N 55°03′40″E / 25.01126°N 55.06116°E / 25.01126; 55.06116
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜபல் அலி துறைமுகம் Jebel Ali Port
ஜபல் அலி துறைமுகத் தோற்றம்
அமைவிடம்
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
இடம் துபாய்
ஆள்கூற்றுகள் 25°00′41″N 55°03′40″E / 25.01126°N 55.06116°E / 25.01126; 55.06116
விவரங்கள்
திறப்பு 1979
நிறுத்தற் தளங்கள் 67
புள்ளிவிவரங்கள்
ஆண்டுக்கான சரக்குப் பெட்டக கொள்ளளவு 13.6 மில்லியன் டி.இ.யு (2013)
இணையத்தளம் www.dpworld.ae/en/home

ஜபல் அலி துறைமுகம் (அரபு: جبل علي) ("மினா ஜபல் அலி" அரபு மொழியில், ஜபல் அலி, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஜபல் அலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆழமான துறைமுகமாகும், இது ஜபல் அலி உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய பரபரப்பான துறைமுகமாகும், இத்துறைமுகமானது மத்திய கிழக்கில் மிகப்பெரிய பரபரப்பான துறைமுகத்தில் ஒன்றாக உள்ளது. [1].

  • ஜபல் அலி துறைமுகம் 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1979 ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.
  • துறைமுக ஊழியர்கள் தங்குவதற்காக ஜெபல் அலி கிராமம் என்ற பகுதி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டபோது அதன் மக்கள் தொகை 300 பேர்.
  • இத்துறைமுகமானது 134 சதுர கிலோமீட்டர் (52 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.
  • உலகின் 120 நாடுகளைச் சேந்ந்த ஏறத்தாழ 5,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறைமுக நகரத்தில் உள்ளன
  • 67 பெர்த்ஸ் (கப்பல்கள் நிருத்தும் நடைமேடை) மற்றும் 134.68 சதுர கிலோமீட்டர் (52.00 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.
  • ஜபல் அலி துறைமுகம் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய துறைமுகமும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய துறைமுகமுமாகும்.[2].


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபல்_அலி_துறைமுகம்&oldid=2753879" இருந்து மீள்விக்கப்பட்டது